அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் கார்த்தி
Page 1 of 1
அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் கார்த்தி
ஈரோடு, ஜூலை 1: அரசியலுக்கு வரமாட்டேன் என்று நடிகர் கார்த்தி கூறினார்.
ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், அபிராமி திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பெண்கள், குழந்தைகள் பார்க்கும் வகையில் சகுனி திரைப்படம் உள்ளது. சிறுத்தை படத்தின் வசூலைவிட, சகுனி படத்தின் 3 நாள் வசூல் அதிகமென திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆயிரத்தில் ஒருவன் படம் பெரிதாக ஓடவில்லை எனக் கூறுவது தவறு. அதேபோன்ற கதை கிடைத்தால் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்.
அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.
எனக்கும், எனது சகோதரர் சூர்யாவுக்கும் திரைத்துறையில் எவ்விதப் போட்டியும் இல்லை. அவரது பாதை வேறு; எனது பாதை வேறு.
அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லை. சகுனி படத்தில் நிகழ்கால அரசியல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 40 சதவீத வருவாய் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருட்டு விசிடி தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது, அபிராமி திரையரங்க உரிமையாளர் என்.எஸ்.எஸ்.செந்தில்நாதன், புனிதா செந்தில்நாதன், மேலாளர் பாலு உடன் இருந்தனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசியலுக்கு வர ஆரணிதான் காரணம்:நடிகர் ஆனந்தராஜ்
» தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி!
» சகுனியில் ராகுலை விமர்சிக்கவில்லை: நடிகர் கார்த்தி
» என்னைவிட சூர்யாதான் அழகு: நடிகர் கார்த்தி
» தெலுங்கு பட விழாவில் தமிழ் ரசிகர்களை இழிவாக பேசவில்லை – நடிகர் கார்த்தி மறுப்பு
» தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி!
» சகுனியில் ராகுலை விமர்சிக்கவில்லை: நடிகர் கார்த்தி
» என்னைவிட சூர்யாதான் அழகு: நடிகர் கார்த்தி
» தெலுங்கு பட விழாவில் தமிழ் ரசிகர்களை இழிவாக பேசவில்லை – நடிகர் கார்த்தி மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum