அரசியலுக்கு வர ஆரணிதான் காரணம்:நடிகர் ஆனந்தராஜ்
Page 1 of 1
அரசியலுக்கு வர ஆரணிதான் காரணம்:நடிகர் ஆனந்தராஜ்
நான் அரசியலுக்கு வர ஆரணிதான் காரணம் என நடிகர் ஆனந்தராஜ் கூறினார். ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 2004-ல் ஆரணியில் நடைபெற்ற திரைப்பட படிப்பிடிப்புக்காக வந்திருந்தபோது பாமகவை விமர்சனம் செய்து பேட்டியளித்தேன். இதனால் ஆரணியைச் சேர்ந்த பாமகவினர் என்னை முற்றுகையிட்டு தாக்க முற்பட்டனர். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவின்பேரில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுத்து என்னை பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிமுகவில் இணைந்து தொடர்ந்து பணிகளை செய்து வருகிறேன். பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததிலிருந்து பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள் வந்துகொண்டே உள்ளன. இத்தேர்தலில் சங்மாதான் வெற்றி பெறுவார். நான் இப்போது புலன்விசாரணை பாகம் 2, பார்வதிபுரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் 300 படங்களில் நடித்த பெருமையை பெற உள்ளேன் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சப்-இன்ஸ்பெக்டருடன் ‘மோதிய’ நடிகர் ஆனந்தராஜ்!
» அரசியலுக்கு வரமாட்டேன்: நடிகர் கார்த்தி
» அரசியலுக்கு வராதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்
» அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டார் விக்ரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum