தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிர்வரும் நிதி ஆண்டில் கச்சா

Go down

எதிர்வரும் நிதி ஆண்டில் கச்சா  Empty எதிர்வரும் நிதி ஆண்டில் கச்சா

Post  meenu Mon Mar 25, 2013 2:30 pm

எதிர்வரும் நிதி ஆண்டில் கச்சா வைரம் இறக்குமதி 25 சதவீதம் அதிகரிக்கும் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி அமைப்பு தெரிவித்துள்ளது. இது, தற்போது 1,450 கோடி டாலராக உள்ளது.

இந்தியா முதலிடம்

வைரத்தை அறுத்தல் மற்றும் பட்டை தீட்டுதல் தொழிலில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக பெல்ஜியம், இஸ்ரேல் மற்றும் சீனா உள்ளன. இத்துறையில் இந்தியாவின் பங்கு 92 சதவீதமாகும். உலகின் பெரிய சுரங்க நிறுவனங்களான டீ பியர்ஸ், ரியோ மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அல்ரோசா ஆகியவை இந்திய இறக்குமதியாளர்களுக்கு கச்சா வைரங்களை சப்ளை செய்கின்றன.

இத்துறையின் மறு ஏற்றுமதி, கச்சா வைரம் இறக்குமதியை சார்ந்துள்ளது. ஏனென்றால், உள்நாட்டில் போதுமான உற்பத்தி இல்லை. எனவே, கச்சா வைரம் இறக்குமதி செய்யப்பட்டு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலில் 34 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

வரும் நிதி ஆண்டில் பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, தற்போதைய மதிப்பீடான 1,600 கோடி டாலரை விட அதிகமாகும். மொத்த நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் இது 66 சதவீதமாக உள்ளது. இதேகாலத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 6.6 சதவீதம் அதிகரித்து 5,000 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு தான் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளிலும் இறக்குமதியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக, ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், இறக்குமதியும் அதிகரிக்கும்.

வெள்ளி ஏற்றுமதி

தங்கம் விலை அதிகரிப்பால் வரும் ஆண்டில் வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் 71.50 கோடி டாலருக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இது 10 சதவீத வளர்ச்சியாகும். இதே காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 1,812 கோடி டாலராக மாற்றமின்றி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum