தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2012 ஆம் ஆண்டில் புதுமை: 2 வைகுண்ட ஏகாதசி-ஆருத்ரா தரிசனம் வருகிறது

Go down

2012 ஆம் ஆண்டில் புதுமை: 2 வைகுண்ட ஏகாதசி-ஆருத்ரா தரிசனம் வருகிறது Empty 2012 ஆம் ஆண்டில் புதுமை: 2 வைகுண்ட ஏகாதசி-ஆருத்ரா தரிசனம் வருகிறது

Post  gandhimathi Mon Jan 21, 2013 6:12 pm




2012 ஆம் ஆண்டானது அஷ்டமி நாளில் பிறக்கிறது. அதுபோல தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13-ந்தேதியும் அஷ்டமி நாளிலேயே பிறக்கிறது. ஜனவரி 5-ந்தேதி அன்று பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும், முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகையும் வருகிறது. இதே போல டிசம்பர் மாதம் 25-ந்தேதி அன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோசமும், முருக பெருமானுக்கு உகந்த கார்த்திகையும் வருகிறது.

இவ்வாறு ஒரே நாளில் 2 திதிகள் வருவது சிறப்பாக கருதப்படுகிறது. மாதத்திற்கு ஒரு நாள் கார்த்திகை திதி வருவது எதார்த்தமாகும். ஆனால் 2012 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 4-ந்தேதி (வியாழக்கிழமை) யிலும்,
31-ந்தேதி (புதன் கிழமை) யிலுமாக ஒரு மாதத்தில் 2 கார்த்திகை திதி வருகிறது. இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் 1-ந்தேதி (புதன் கிழமை)யும், 31-ந்தேதி (வெள்ளிக் கிழமை)யிலுமாக பவுர்ணமி வருகிறது.

மே மாதம் 20-ந்தேதி அன்று அமாவாசையும், கார்த்திகையுமாக ஒரே நாளில் வருகிறது. மாதம்தோறும் 15 நாளுக்கு ஒருமுறை வீதம் 2 பிரதோஷங்கள் வருவது இயல்பான ஒன்று. இதில் சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை சிறப்பு நாளாக போற்றுகிறார்கள். இந்த ஆண்டில் (2012-ல்) ஜுன் மாதத்தில் 2-ந்தேதி மற்றும் 16-ந்தேதியிலும், அக்டோபர் மாதத்தில் 13-ந்தேதி மற்றும் 27-ந்தேதியிலுமாக 4 சனி பிரதோஷம் வருகிறது.

ஆண்டிற்கு ஒரு வைகுண்ட ஏகாதசியும், ஒரு ஆருத்ரா தரிசனமும் வருவது இயல்பானதாகும். ஆனால் 2012-ல் ஜனவரி 5-ந்தேதி (வியாழக்கிழமை) டிசம்பர் 24-ந்தேதி (திங்கட்கிழமை) யிலுமாக 2 வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஜனவரி 8-ந்தேதி மற்றும் டிசம்பர் 28-ந்தேதிகளில் ஆருத்ரா தரிசனம் வருகிறது.

இந்த நாளில் நடராஜருக்கு களி படைத்தல் சிறப்பாகும். இவ்வாறு இந்த ஆண்டில் 2 வைகுண்ட ஏகாதசியும், 2 ஆருத்ரா தரிசனமும் வருவது சிறப்பிலும் சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி அன்று கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருவது இயல்பு. அதேபோல 2012-ல் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது.

இதே நாளில் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ திதியும், முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை திதியும் வருகிறது. ஆகஸ்ட்
1-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதே நாளில் ஆவணி அவிட்டம், பவுர்ணமி என்று 3 விசேஷங்கள் வருகிறது. இந்த நாட்கள் மத நல்லிணக்கமாக வருவது சிறப்பிலும் சிறப்பாக கருதப்படுகிறது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum