தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிர்வரும் 2019 வரை டோனிதான் அணித்தலைவர்!

Go down

எதிர்வரும் 2019 வரை டோனிதான் அணித்தலைவர்! Empty எதிர்வரும் 2019 வரை டோனிதான் அணித்தலைவர்!

Post  meenu Sun Mar 17, 2013 12:40 pm



16


டோனிஅவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இதையடுத்து அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியின் மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்த்த இவர், இந்தியாவின் வெற்றி அணித்தலைவராக சாதனை படைத்தார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இழந்த பின்பு கிடைத்த ஒரு மாத இடைவெளியில், தன்னைத் தானே ஆய்வு செய்தார் டோனி.

அணித்தலைவராக இவரது அணுகுமுறை மாறியது. அணியை மிகுந்த உறுதியுடன் வழிநடத்த தொடங்கினார். திறமைக்கு ஏற்ப செயல்படாமல் கவனக்குறைவாக விளையாடும் வீரரிடம் தனது அதிருப்தியை உணர வைத்தார்.

துடுப்பாட்டத்தில் “சூப்பர் பார்மில்” உள்ள இவர் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். இவரது தலைமைப்பண்பிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், வரும் 2019 உலகக் கிண்ண தொடர் வரை அணித்தலைவராக நீடிக்க வேண்டும்.

அதுவரை அணித்தலைவரை மாற்றுவது தொடர்பாக நாம் விவாதிக்க கூடாது. ஆனாலும், வயது காரணமாக 2019 வரை டோனி விளையாடுவாரா என தெரியவில்லை. இது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

இந்திய அணியின் சிறந்த அணித்தலைவர் யார் என்று கூறுவது கடினம். பட்டோடி, வடேகர், கங்குலி அல்லது டிராவிட் தான் சிறந்த அணித்தலைவர் என்று வாதம் நடப்பது உண்டு என்றும் ஆனால், புள்ளி விவரங்களின் அடிப்படையில் டோனி தான் வெற்றி அணித்தலைவர் என்று உறுதியாக கூறலாம் எனவும் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum