தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு

Go down

சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு Empty சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு

Post  ishwarya Mon Mar 25, 2013 12:28 pm



தேசிய விருது வென்ற வாகை சூட வா திரைப்படம், இந்தியாவின் சர்வதேச திரைப்பட திருவிழாவில் ஒளிபரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 144 திரைப்படங்கள் பட்டியலில் இந்தியத் திரைப்படங்கள் 20 தேர்வு செய்யப்படும். அந்த இருபதில் தமிழ் படமாக வாகை சூட வா ஒன்று மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ. சர்குணம் இயக்கிய இப்படம் சிறந்த காதல் மற்றும் காமெடி கலந்து, கல்வி ஒன்று மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்ற மிக ஆழமான கருத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டது. விமல், இனியா, பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமைய்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இதற்காக அமைக்கப்பட்ட 10 பேர் அடங்கிய குழு ஒன்று சுமார் 21 நாட்களாக பல்வேறு திரைப்படங்களைப் பார்த்து 20 படங்களைத் தேர்வு செய்துள்ளது.

அதில், மலையாளத்தில் 5 படங்களும், பெங்காலியில் 3 படங்களும், மராத்தியில் 2 படங்களும், இதர மொழிகளில் தலா ஒரு படமும் தேர்வாகியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum