நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
Page 1 of 1
நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
சென்னை, பிப்.2: நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நார்வே திரைப்பட விழா ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரங்களில் நடைபெறுகிறது. இப்படவிழாவில் திரையிடப்படும் 15 தமிழ்த் திரைப்படங்களை 7 பேர் கொண்ட நார்வே திரைப்பட விழா குழு தேர்வு செய்துள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "அழகர்சாமியின் குதிரை', ராஜ்குமார் இயக்கிய "வெங்காயம்', சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த "வாகை சூட வா', ஜீவா நடித்த "கோ', "ஆரண்ய காண்டம்', "தீராநதி' (பிரான்ஸ்), "எங்கேயும் எப்போதும்', சசிகுமாரின் "போராளி', செல்வராகவனின் "மயக்கம் என்ன", சங்க கால பின்னணியில் எடுக்கப்பட்ட "பாலை', புகழேந்தி தங்கராஜின் "உச்சிதனை முகர்ந்தால்', "வர்ணம்', "மகான் கணக்கு', "ஸ்டார் 67' (கனடா) அரவாணிகளின் வாழ்வை சித்திரித்த "நர்த்தகி' ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சுபாஷ் கவியன் இயக்கிய பாலம் கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம், "அன்னக்கிளி' ஆர். செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த "பச்சைக்குடை' உள்ளிட்ட குறும்படங்களும் தேர்வாகியுள்ளன.
குறும்படங்கள் வரவேற்பு: குறும்படப் பிரிவுக்காக படங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை வெளியிடப்படாத 25 நிமிஷங்களுக்கு உள்பட்ட படங்களை 15.2.2012-ம் தேதிக்குள் அனுப்பலாம். தொடர்புக்கு: 98400 67794.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
» நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு
» நீர்ப்பறவை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» நார்வே திரைப்பட விழாவில் 15 தமிழ் படங்கள்
» நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு
» நீர்ப்பறவை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» நார்வே திரைப்பட விழாவில் 15 தமிழ் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum