சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா
Page 1 of 1

சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன், (இடமிருந்து) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சரத்குமார், நடிகை சுஹாசினி.
சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகமானது, 2003-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ""சென்னை சர்வதேச திரைப்பட விழா''வை சென்னையில் நடத்தி வருகிறது. இந்த முறை 10-வது ஆண்டாக சர்வதேசத் திரைப்பட விழா வரும் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் 54 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 172 திரைப்படங்கள், எட்டு நாள்களில் 8 திரையரங்குகளில் திரையிடப்படும்.
ரூ.50 லட்சம் நிதியுதவி: கடந்த ஆண்டு நடைபெற்ற 9-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டைப் போன்றே வழிகாட்டுதலும், ஆதரவும், நிதியுதவியும் அளித்திடுமாறு இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தக் கோரிக்யையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, இந்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகைக்கான காசோலையை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் இ.தங்கராஜிடம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான ஆர்.சரத்குமார், திரைப்பட நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» நீர்ப்பறவை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு
» கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு போகிறது பாலாவின் பரதேசி!
» நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு
» நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum