நடிகர் ஜஸ்பால் பட்டி சாலைவிபத்தில் உயிரிழந்தார்
Page 1 of 1
நடிகர் ஜஸ்பால் பட்டி சாலைவிபத்தில் உயிரிழந்தார்
நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநருமான ஜஸ்பால் பட்டி (57), வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
படிண்டா பகுதியில் இருந்து, ஜலந்தருக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள "பவர் கட்' பஞ்சாபி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என்று அவரின் நண்பர் வினோத் சர்மா தெரிவித்தார்.
காரை ஜஸ்பால் பட்டியின் மகன் ஜஸ்ராஜ் ஓட்டிச் சென்றார். பவர் கட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சுரில் கெளதமும் உடன் சென்றுள்ளார். விபத்தில் காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜஸ்பால் பட்டிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சிறந்த நகைச்சுவை நடிகரான ஜஸ்பால், டிவி தொடர்களின் மூலம் பெரும்புகழ் பெற்றார். அவரின் ஃபிளாப் ஷோ தொடர், தூர்தர்ஷனில் 1989ஆம் ஆண்டு வெளியானது. இன்றளவும் மக்கள் அந்நிகழ்ச்சியை நினைவு வைத்துள்ளது அதன் பெரும் வெற்றிக்குச் சான்று.
ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள ஜஸ்பால், குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜஸ்பால் பட்டியின் மறைவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் திலீப் இன்று காலை உயிரிழந்தார்
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்-ஒரு முன்னணி நடிகர், நடிகையும் வரவில்லை!
» ஏ.ஆர். முருகதாசை புகழ்ந்து பேசுவதா? நடிகர் ராம்சரனின் பல்லை உடைப்பேன் நடிகர் பாலகிருஷ்ணா ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum