தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கமேஸ்வரர் கோவில்

Go down

சங்கமேஸ்வரர் கோவில் Empty சங்கமேஸ்வரர் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 12:27 pm

இந்த கோவில் பவானி சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் கிமீ தொலைவிலும் உள்ளது.பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுமிடத்தில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக் கோவில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இரண்டு வாயில்களும் கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் ஐந்து நிலைகளையும் ஏழு கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றும் ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

இந்த கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. இங்கு வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதற்கு வலதுப்பக்கத்தில் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இருப்பது சுயம்பு லிங்கம் ஆகும். சுப்பிரமணிய சுவாமிக்கு, வேதநாயகி அம்பாள் மற்றும் சங்கமேஸ்வரர் சந்நிதிக்கு நடுவே சந்நிதி அமைந்திருப்பது இந்தக் கோவிலின் மிக சிறப்பாகும்.

தந்தத்தால் ஆன கட்டில்::

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர் தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ, தாமும் அம்பிகையைக் காண விரும்பினார்.

ஆனால் இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் தரிசித்தார். காரோவும் அம்பிகையை அத்துவாரத்தின் வழியே தினந்தோறும் தரிசித்து வழிபட்டு வந்தார். அந்த துவாரங்கள் இன்றும் அப்படியே உள்ளன.

ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார்.

அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜவரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது.

ஒரு முறை திருஞானசம்பந்தர் இந்த கோவிலுக்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜூரம் வந்த பொழுது, இங்குள்ள ஜவரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. இந்த கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்களின் திரு உருவங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இலந்தை மரம்::

இக்கோவிலின் தலவிருட்சம் இலந்தை மரம் ஆகும். வேதமே மர வடிவம் எடுத்து வந்திருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிட்டும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

போக்குவரத்து வசதி::

சென்னையில் இருந்து ஈரோடு சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பஸ் மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum