சங்கமேஸ்வரர் கோவில்
Page 1 of 1
சங்கமேஸ்வரர் கோவில்
ஸ்தல வரலாறு:
ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு இறைவன் சிவபெருமான், அம்மன் சங்கமேஸ்வரி சன்னதிகளுக்கு இடையே முருகப்பெருமான் தனி சன்னதியில் கோவில் கொண்டுள்ளார்.
இது சோமாஸ்கந்த அமைப்பு கோவிலாகும். வட இந்தியாவில் கங்கையுடன், யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் (அலகாபாத்) என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று இங்கு 3 நதிகள் சங்கமிப்பதால் இந்த திருத்தலம் `தென் திரிவேணி சங்கமம்' என்று போற்றப்படுகிறது.
அதாவது, காவிரி, பவானி, அமுதநதி ஆகியவை இங்கு சங்கமிக்கின்றன. இங்கும் சரஸ்வதி நதி பாய்வதாகவும், அது கண்ணுக்கு தெரிவதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இந்த இடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம்.
சிறப்புகள்:
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இங்கு நதியில் நீராடிவிட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் விரைவில் அந்த பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சங்கமேஸ்வரர் கோவில்
» சங்கமேஸ்வரர் கோவில்
» சங்கமேஸ்வரர் கோவில்
» சங்கமேஸ்வரர் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சங்கமேஸ்வரர் கோவில்
» சங்கமேஸ்வரர் கோவில்
» சங்கமேஸ்வரர் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum