தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கமேஸ்வரர் கோவில்

Go down

சங்கமேஸ்வரர் கோவில் Empty சங்கமேஸ்வரர் கோவில்

Post  amma Sat Jan 12, 2013 3:02 pm

ஈரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் வடமேற்கில் அருள்மிகு வேத நாயகி உடனாய அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்பாலிக்கும் பவானி தலம் உள்ளது.

இத்தலம் தென் பிரயாகை என்று அழைக்கப்படுகிறது. கோவில் தெற்கு பகுதியில் கூடுதுறை, பவானி முக்கூடல் உள்ளது. இந்த முக்கூடலில் அமாவாசை, ஆடிபெருக்கு நாட்களில் இங்கு நீராடுவது சிறப்பானது.

கூடுதுறை கரையில் அரசமரம் உள்ளது. அரச மரத்தின் அடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். விநாயகரைச் சுற்றி குழந்தை பாக்கியம் வழங்கிய நாகர் சிலைகள் உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்களும், நாகதோஷம் உள்ளவர்களும், முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்பவர்களும் வந்து வழிபாடு செய்யும் தலம் இது.

அரசமரத்தை தாண்டி இறைவன் எழுந்தருளியுள்ள இன்னொரு ஆலயம் அமுதலிங்கேஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் ஆவுடையாரின் மீது பள்ளத்துடன் கூடிய ஒரு குமிழி இருக்கிறது. அந்த பள்ளத்தில் பொருந்தி இருக்கும் பாணலிங்கம் மழுமழுவென்று இருக்கும். இந்த பாண லிங்கத்தை தனியாக எடுக்கலாம். மகப்பேறு வேண்டுகிறவர்கள், பாணலிங்கத்தை மடியில் கட்டிக் கொண்டு சிவபெருமானை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum