தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயில்பாறை பாலமுருகன் கோவில்

Go down

   மயில்பாறை பாலமுருகன் கோவில் Empty மயில்பாறை பாலமுருகன் கோவில்

Post  ishwarya Thu May 23, 2013 12:08 pm

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா, இருணாப் மாவட்டம், வாணியம்பாடி இருணாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரத்தில் ஏலகிரிமலையின் பின்புறம் மலையின் மையப் பகுதியில் இயற்கையான, அமைதி நிறைந்த சூழலில் அமைந்துள்ளது, மயில்பாறை பாலமுருகன் கோவில்.

நுழைவு வாயிலில் இருந்து சுமார் 350 படிக்கட்டுகள் மேலே ஏறி சென்றால் விநாயகர், நவக்கிரகம், ஈஸ்வரன், ஆஞ்சநேயர், நரசிங்க பெருமாள், ஓம் சக்தி, நாக சக்தி, சக்திவேல் மண்டபம், அய்யப்பன் சன்னதி என 9 சன்னதிகள் உள்ளன.

தொடர்ந்து 3 வெள்ளிக்கிழமை வழிபட்டால்.............. இந்த சன்னதிகளுக்கு மத்தியில் மேலே சில படிக்கட்டுகள் ஏறி சென்றால், அங்கு பாலமுருகன் கோவில் பிரமாண் டமாக காட்சியளிக்கிறது. அங்குள்ள கருவறையில் பாலமு ருகன் கையில் வேலுடனும், அருகில் மயிலுடனும் அழகு மிளிர காட்சியளிக்கிறார்.

இங்குள்ள ஒவ்வொரு சன்னதிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகள் அகல பக்தர்கள் இங்கு வந்து அனைத்து சன்னதிகளிலும் உள்ள சாமியை வழிபட்டுவிட்டு, முடிவில் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றக் கோரி கருவறையில் உள்ள பாலமுருகனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

தொடர்ந்து 3 வாரங்கள் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து பாலமுருகனை வழிபட்டால், தங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் அபரிமிதமான நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், தங்களால் முடிந்த நேர்த்திக்கடனை இங்கு செலுத்துகின்றனர். அவ்வாறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செலுத்தி வரும் நேர்த்திகடன் இந்த கோவிலின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கிறது.

நேர்த்தி கடன் நிறைவேற்றும் பக்தர்கள்............... குறிப்பாக நேர்த்தி கடன் நிறைவேறிய பக்தர்கள் மூலமாகத் தான் கோவிலுக்கு செல்லும் வழியில் படிக்கட்டுகள், குடிநீர் வசதி, ஜெனரேட்டர், சூரிய ஒளி மின் விளக்குகள், மேற்கூரைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கோவிலுக்கு கிடைத்துள்ளது.

அதற்கு சாட்சியாக ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் உபயதாரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் கோவில் உபயோகத்திற்காக எந்த பொருளை கொடுத்தாலும், அதில் அவர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருப்பதையும் இங்கு பார்க்கலாம்.

சிறப்பு வழிபாடு - அன்னதானம்................... இவ்வாறு வல்லமை படைத்த இந்த பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்றைய தினத்தில் சன்னதிகளில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடக்கிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த கோவிலை அதே கிராமத்தை சேர்ந்த மலையடிவாரத்தில் வசிக்கும் ஜெயபால் சுவாமி நிர்வாகம் செய்து வருகிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இவரது தலைமையில் தான் சாமிகளுக்கு ஆராதனைகள் நடத்தப்படுகிறது. இந்த ஆராதனைக்கு பிறகு ஜெயபால் சுவாமியிடம் பக்தர்கள் அருள்வாக்கு கேட்டுச் செல்கிறார்கள்.

ஆண்டு விழா.............. ஆண்டுதோறும் தை பூச திருவிழா இங்கு விசேசஷமாக கொண்டாடப்படுகிறது. 500 பால்குடங்களுடன் பக்தர்கள் நடைபயணமாக கோவிலை அடைவார்கள். அப்போது, வேண்டிக் கொண்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து, பால முருகனை வழிபடுவார்கள். அதேபோல், ஒவ்வொரு வருடமும் சித்திரை 19&ந் தேதி ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் 48 கலச பூஜையும், வள்ளி, தெய் வானை-முருகன் திருமண நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடைபெறும். மொத்தத்தில் இந்த மலை மீது வீற்றிருக்கும் பாலமுருகனை நம்பி வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றபடுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டோர், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள், தொழிலில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் இங்குள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து, வேண்டிக் கொள்கின்றனர். குறிப்பாக குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள் வேண்டுதலுக்கு பிறகு, கோவில் வளாகத்தில் உள்ள தேவலறி மரத்தில் துணியில் கல்லை கட்டி தொங்க விடுகிறார்கள்.

அவ்வாறு செய்வதன் மூலம் தங்களது வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை. அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில், இங்கு வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

இந்த கோவிலை வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில், குரிசிலாப்பட்டு என்ற ஊரை தாண்டியதும், இடதுபுறம் ஒரு சில கிலோமீட்டர் சென்றால் அடையலாம். அதேபோல், வாணியம்பாடி, ஆலங்காயம் வழியாக வருபவர்கள் குரிசிலாப்பட்டு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum