தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்ககிரி நரசிம்மர் கோயில்

Go down

சிங்ககிரி நரசிம்மர் கோயில் Empty சிங்ககிரி நரசிம்மர் கோயில்

Post  meenu Fri Jan 18, 2013 11:20 am

அழகான மலைக் கோயிலான சிங்கிரி ஆயிரஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ராஜவர்மன் என்ற குறுநில மன்னர் இதைக் கட்டியுள்ளார். மேலே செல்ல 40 படிக்கட்டுகள் உள்ளன. ஸ்ரீ நரசிம்மர், தாயார் மகாலட்சுமியை வலப்புறம் அமர வைத்துள்ளார். சாதாரணமாக தாயாரை இடப்பக்கம் தான் வைத்திருப்பார்.

மூலவர் லட்சுமி நரசிம்மர் ஆறு அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் சிறப்பாக உள்ளது. இங்கு ஹிரண்யனை வதம் செய்ய வந்த அதே கோலத்தில் பகவான் நரசிம்மர் பதினாறு கரங்களுடன் மேற்கு நோக்கி பிரமாதமாகக் காட்சியளிக்கிறார்.

பயம் பாதுகாப்பு என்று இரண்டு உணர்ச்சிகளையும் ஒரே சமயத்தில் உணர வைக்கும் அற்புதக் கோலம். கரங்களில் பிரயோக சக்கரம் பஞ்சாயு தங்கள் தவிர ஹிரண்யணை மடி மீது வைத்து அருள் புரியும் காட்சி. சந்நிதியில் சிறிய லட்சுமி நரசிம்மர் யோக நிலையிலும், இடது மடியில் லட்சுமியுடன் காட்சியளிப்பது மிகவும் சிறப்பு.

நரசிம்மப் பெருமாள் உக்ர ரூபமாக காட்சியளித்தாலும் தாயார் கனகவல்லியின் சந்நிதி எதிரே அமைந்துள்ளதால், பகவான் சாந்த நரசிம்மராகக் காட்சியளிக்கிறார். இப்பெருமாள் காலையில் சாந்த நரசிம்மர், மதியம் யோக நரசிம்மர் மற்றும் மாலையில் பிரதோஷ காலத்தில் உக்ரநரசிம்மராகவும் காட்சியளிப்பதாகக் கருதப்படுகிறது.

செஞ்சி மன்னர் தேசிங்கு ராஜன், தரணிசிங் என்ற அரசன், ஆற்க்காட்டு நவாப், மற்றும் பிரெஞ்சு கனவான்கள் நிறைய ஆபரணங்கள் அளித்துள்ளார். நரசிம்மர் மிக்க வரப்பிரசாதி என்பதால் நிறைய அன்பர்கள் ஐயனை நாடி வருகின்றனர்.

இத்தலம் பற்றிய மேலும் சில செய்திகள்:

கருவறையில் நரசிம்மரை பதினாறு கைகளுடன் காண்பது மிக அபூர்வம். அதுவே இத்தலத்தின் சிறப்பு. ஐந்து அடி உயரத்தில் கம்பீரமாக காணப்படுகிறார் பகவான். அவரது கைகளில் காணப்படும் ஆயுதங்களும் அவற்றின் நிலைகளும்:-

1.பதாக ஹஸ்தம்,
2.ப்ரயோக சக்கரம்,
3.ஹூரிகா என்னும் குத்துக் கத்தி,
4. பாணம்,
5. அசுரனின் தலையை அறுத்தல்,
6.கத்தியில் அசுரன் ஒருவனைக் கொல்லுதல்,
7.இரணியனின்காலை அழுத்திப்பிடித்தல்,
8.இரணியனின் குடலைக் கிழிப்பது இடப்புறக்கைகளில்,
9. குடல் மாலையைப் பிடித்திருப்பது,
10.சங்கம்,
11.வில்,
12.கதை,
13.கேடயம்,
14.வெட்டப்பட்ட தலை,
15.இரணியனின் தலையை அழுத்திப்பிடித்திருப்பது,
16.குடலைக்கிழிப்பது.

இத்தகைய பதினாறு கரங்களும் உடைய நரசிம்மர் வேறு எங்குமில்லை. கோயிலின் தலபுராணம் கூறும் விவரம் இது. அயோத்தி மன்னன் நிமி குருவான வசிஷ்டரைக் கொண்டு திதி செய்தான். மன்னன் மீது பொறாமை கொண்ட ஒரு அசுரன்.

சிரார்த்த உணவை மாமிசமாக்கி விட்டான். கோபித்த வசிஷ்டர் மன்னனை மாமிசம் தின்னும் அசுரனாக மாற சபித்து விட்டார். தான் செய்யாத குற்றத்துக்காக சபித்த வசிஷ்டரை உருவில்லாமல் போகுமாறு சபித்தான், நிமி சக்கரவர்த்தி. பிரம்மாவின் ஆலோசனைப்படி வசிஷ்டர், இந்த நரசிம்ம வனத்திற்கு வந்து, குகையில் தவம் செய்து மறுபடியும் தன் உருவத்தைப் பெற்றார்.

அத்துடன் திருப்தி அடையாத வசிஷ்டர், நரசிம்மரின் தரிசனம் கிடைக்கக்கடுந்தவம் செய்தார். வசிஷ்டரின் தவத்தைக் கலைக்க இந்திரன் ரம்பா, மேனகையை அனுப்பினார். வசிஷ்டர் மேனகையிடம் மயங்கினார். ஒரு நாள் அசரீரி தவத்தின் முழுப்பயனை அடைய வேண்டுமானால் நரசிம்ம வனத்தின் உள்ளே சென்று தவம் செய் என்றது. வசிஷ்டர் வனத்துக்குள் சென்று கடுந்தவம் செய்தார்.

தவத்தைக் கெடுக்க இந்திரனே ஐராவதத்தில் ஏறி வந்து ஆயுதங்களால் துன்புறுத்தினார். வசிஷ்டர் நாராயண அஷ்டாகூரியைச் சொல்லி தவம் செய்ய, சிங்கப்பெருமாள் மனமிரங்கி சக்கர பிரயோகம் செய்தார். அது இந்திரனையும் தேவர்களையும் தாக்க, அவர்கள் வசிஷ்டரிடம் மன்னிப்புக் கேட்டுகொண்டனர்.

வசிஷ்டரும் உண்மை ஞானம் பெற மனித உருவை விடுத்து ஒரு மரமாக மாறி பகவானின் தரிசனம் பெற்றார். இந்திரன் தன் தவறுக்காக இந்திர புஷ்கரிணி என்று தீர்த்தம் அமைத்து வழிபட்டான். இங்கு ஆலய பிரதட்சணம் செய்து உபவாசமிருந்தால் நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும் என்று பிரகலாதர் கூறுவதாக தலபுராணம் சொல்கிறது.

போக்குவரத்து வசதி :

இந்த கோயிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இருந்து பஸ் மூலம் வேலுர் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும். சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரயில் மூலம் வேலுர் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்.

வேலூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. இக்கோயிலுக்கென்றே வேலூரிலிருந்து காலை 8.30 மணிக்கும் மதியம் 12.30-க்கும் நேரடிப்புறநகர் பேருந்து வசதி உள்ளது. புதுச்சேரி-கடலூர் பாதையில் உள்ள அபிஷேகபாக்கம் என்ற ஊரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum