தோஷங்கள் போக்கும் ராகு கால பூஜைகள்
Page 1 of 1
தோஷங்கள் போக்கும் ராகு கால பூஜைகள்
மக்களுக்கு பல நன்மைகள் தந்து நல்வாழ்வை அளிக்கும் காலங்கள் பல உள்ளன. பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்ற யோக காலங்களை சிறந்த காலங்களாக கருதும் நம்மனதில் ராகுகாலம் என்றாலே ஒருவித பயம் உண்டாகிறது. இருட்டில் இருப்பவர்கள் வெளிச்சமாகவும், வருத்தப்படுபவர்களுக்கு வளம்தரும் கற்பகமாகவும் விளங்கும் ராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும்.
ராகுகாலம் 1 மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 6.00, திங்கள் 7.30 9.00, செவ்வாய் 3.00 4.30, புதன் 12.00 1.30, வியாழன் 1.30 3.00, வெள்ளி 10.30 12.00, சனி 9.00 10.30 ஆகும். ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும்.
இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும். இந்தநேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோசங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். சுக்கிரவார(வெள்ளிக்கிழமை)
ராகுகால பூஜை..........
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 -12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)
மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை......
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும். செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தோஷங்கள் போக்கும் ராகுகால பூஜை
» தோஷங்கள் போக்கும் விஷமங்களேஸ்வரர்
» தோஷங்கள் போக்கும் சக்கரம்
» தோஷங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்
» தோஷங்கள் போக்கும் ராகுகால பூஜை
» தோஷங்கள் போக்கும் விஷமங்களேஸ்வரர்
» தோஷங்கள் போக்கும் சக்கரம்
» தோஷங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்
» தோஷங்கள் போக்கும் ராகுகால பூஜை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum