தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோஷங்கள் போக்கும் சக்கரம்

Go down

தோஷங்கள் போக்கும் சக்கரம் Empty தோஷங்கள் போக்கும் சக்கரம்

Post  meenu Sun Mar 24, 2013 1:26 pm


ஒரு சமயம் அசுரர்களுக்கு பலம் அதிகமானது. அதனால் முனிவர்களை ஆட்டிப்படைத்தார்கள். அசுரர்களின் தொல்லை தாங்காமல் முனிவர்கள் விஷ்ணுபகவானிடம் முறையிட்டார்கள். விஷ்ணுபகவான், சிவனை நினைத்து கடும் தவம் இருந்தார். அந்த தவத்தை ஏற்று சர்வேஸ்வரன், பரந்தாமனுக்கு காட்சி கொடுத்தார். ஈசனைக் கண்ட பகவான் சிவ சஹஸ்ரநாமத்தை மகிழ்ச்சியுடன் உச்சரித்தார்.

அந்த சிவநாமங்களைக் கேட்ட பரமசிவன், பரம ஆனந்தம் அடைந்து சுதர்சன ஆயுதத்தைத் கொடுத்தார். அந்த ஆயுதமே சுதர்சனச் சக்கரமாகத் திகழ்கிறது. யுகம் யுகமாக நம் முன்னோர்கள் திருமாலின் திருக்கரத்துச் சக்கரத்தினையும் பூஜிக்கிறார்கள். "உன்னால் இயற்றப்பட்ட சிவ சஹஸ்ரநாமத்தை கேட்பவருக்கும், அதை உச்சரிப்பவர்களுக்கும் சகல தோஷங்களும் விலகும்.

எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகளும் நீங்கும். அதேபோல் உனக்குச் சொந்தமான சுதர்சன சக்கரத்தை பூஜிப்பவர்களுக்கு சகல பாவங்கள் அகலும். உயர்ந்த வாழ்க்கையும் ஏற்றமும் ஏற்படும்." என்று பரந்தாமனுக்குப் பரமன் ஆசியளித்தார். இப்படி சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்பதை எடுத்துக்காட்டவே சாளக்கிராமம் சுதர்சன சக்கரமும் சிவ சஹஸ்ர நாமமும் விளங்குகிறது.

இப்படி இரு சக்திகளும் அவற்றினுள் இருப்பதால் அதனை நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கு ஏற்றங்கள் பல கிடைக்கும். திருப்பதியில் ஆண்டவன் அபிஷேகத்திற்க்கு உபயோகப்படும் தீர்த்தத்தை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வருடத்துக்கு ஒருநாள் புறப்பாடாக வந்து நீரில் நீராடி புனிதப் படுத்திச் செல்வார் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்திற்கு ஸ்ரீ சக்ர தீர்த்தம் என்று பெயர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum