தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோஷங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்

Go down

தோஷங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார் Empty தோஷங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்

Post  meenu Sun Mar 24, 2013 1:35 pm

கோவையில் காந்திபார்க் சலிவன் வீதியில் வேணு கோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மைசூர் மன்னரால் கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையால் கிழக்கு நோக்கிய நிலையில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் டவுன்ஹால் கரடி கோவிலில் மூலவர் சன்னதிக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. கோவை கணபதி வேணுகோபால் சாமி கோவிலிலும் சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

சக்கரத்தாழ்வார் மகிமை குறித்து கோவை நாகசக்தியம்மன் அறக்கட்டளை ஸ்ரீ சிவசண்முகசுந்தரபாபுஜி சுவாமிகள் கூறியதாவது:- மகாவிஷ்ணுவின் அம்சமே சக்கரத்தாழ்வார் ஆவார். இவரை வழிபடுவதால் தீயவினைகள் குறித்த பயம் அகலும். நோய் நொடிகள் அகலும். சொந்த வீடு கட்டும் யோகம் வரும்.

திருமணமாகாத பெண்களுக்கு சர்ப்பதோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், புத்திரதோசம் ஆகிய 6 வகையான தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் அகலும். செய்வினை, பேய், பிசாசு ஆகியவை நீங்க சக்ரத்தாழ்வாரை வழிபடலாம்.சக்ரத்தாழ்வாரை வெள்ளிக்கிழமை செவ்வரளி, துளசி ஆகியவற்றால் மூலம் வழிபட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum