நார்வே திரைப்பட விழாவில் 15 தமிழ் படங்கள்
Page 1 of 1
நார்வே திரைப்பட விழாவில் 15 தமிழ் படங்கள்
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் "பீட்சா', "நீர்ப்பறவை' உள்ளிட்ட 15 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
நான்காவது ஆண்டாக நார்வேயில் நடக்கும் இந்த விழா, ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இந்த முறை ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான லண்டன், பெர்லின் மற்றும் ஆஸ்லோவில் இப்படங்கள் திரையிடப்படுகின்றன.
சசிகுமார் நடித்த "சுந்தரபாண்டியன்', விஜய்சேதுபதி நடித்த "பீட்சா', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', பாலாஜி சக்திவேலின் "வழக்கு எண் 18/9', புதுமுகங்கள் நடித்த "அட்டக்கத்தி', பிரபுசாலமனின் 'கும்கி', பிரபுசாலமன் தயாரித்த "சாட்டை', பிரகாஷ்ராஜ் இயக்கிய 'டோனி', புதுமுகங்கள் நடித்த "ராட்டினம்', சீனுராமசாமியின் "நீர்ப்பறவை', உதயநிதி ஸ்டாலின் நடித்த "ஒரு கல் ஒரு கண்ணாடி', புதுமுகங்கள் நடித்த "புதுமுகங்கள் தேவை', ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட "இனியவளே காத்திருப்பேன்', இலங்கையில் உருவான "இனி அவன்', கனடாவில் தயாரிக்கப்பட்ட "சகாராப் பூக்கள்' ஆகிய படங்கள் நார்வே திரைப்பட விழாவிற்கு நடுவர் குழுவால் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் பட விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
» நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு
» நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum