தயவு செய்து எந்த நடிகருடனும் இணைத்து பேசவேண்டாம்: அஞ்சலி
Page 1 of 1
தயவு செய்து எந்த நடிகருடனும் இணைத்து பேசவேண்டாம்: அஞ்சலி
நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் எங்கேயும், எப்போதும் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அந்தப்படம் வெற்றிகரமாக ஒடியது. அதையடுத்து இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அஞ்சலி முற்றிலும் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, அங்காடித் தெரு படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்த ரசிகர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும், எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். என் வாழ்க்கையில் 5 ஆண்டுகளுக்கு மேல் போராடி இப்போதுதான் ஒரு நல்ல நடிகை என்கிற அந்தஸ்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். இப்போது நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கும்போது, ஒரு சிலர் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி என்னை அதிர்ச்சியடைய செய்கிறார்கள்.
என்னுடன் இணைத்து பேசப்பட்ட நடிகருடன் ஒரு படம்தான் நடித்தேன். அதன்பிறகு அவருடன் நடிப்பதில்லை என்று எண்ணி பல படங்களை தவிர்த்துவிட்டேன். நான் இன்னும் சினிமா துறையில் வளர்ந்து நல்ல நடிகை என்ற அந்தஸ்தில் விருதுகள் வாங்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறேன். என்னுடைய இந்த ஆசைகள் நிறைவேற உங்கள் ஆதரவையும், வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்.
இதுவரை எனக்கு யாரிடமும் காதல் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். அதனால் தயவுசெய்து என்னை எந்த நடிகருடனும் இணைத்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய
» என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» தயவு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள்! கவுண்டரின் நெத்தியடி!!
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» நயன்தாரா, அனுஷ்காவுடன் இணைத்து வதந்திகள்: ஆர்யா பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum