தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா, அனுஷ்காவுடன் இணைத்து வதந்திகள்: ஆர்யா பேட்டி

Go down

நயன்தாரா, அனுஷ்காவுடன் இணைத்து வதந்திகள்: ஆர்யா பேட்டி Empty நயன்தாரா, அனுஷ்காவுடன் இணைத்து வதந்திகள்: ஆர்யா பேட்டி

Post  ishwarya Sat May 04, 2013 5:17 pm

ஆர்யாவின் பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. இதனால் கதாநாயகிகளுடன் இவரை இணைத்தும் கிசுகிசுக்கள் வருகின்றன. இதுகுறித்து ஆர்யா அளித்த பேட்டி வருமாறு:-

நான் பைலட் ஆக ஆசைப்பட்டேன். எனது தந்தை என்ஜினீயரிங் படிப்பை முடிக்கச் சொன்னார். ஆனால், என் வாழ்க்கை மாறியது. நடிகனாவேன் என கனவிலும் நினைக்கவில்லை. நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நண்பர்கள். ஒன்றாக படித்தோம்.

மறைந்த இயக்குனர் ஜீவா என்னை பார்த்த பிறகு எல்லாமுமே மாறிப் போனது. ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் முதன் முதல் நான் நடித்தது மறக்க முடியாதது. அண்ணா நகரில் பூஜாவிடம் காதலை சொல்வதுபோல் காட்சி எடுத்தனர். வசனத்தை நினைவில் வைத்துக்கொண்டு நம்பிக்கையோடு நடித்தேன் சிறப்பாக வந்தது.

பெண்களுடன் சுற்றுவதாக என்மீது ‘இமேஜ்’ விழுந்துள்ளது. இதனால் என் சினிமா பணிகள் பாதிக்கப்படவில்லை. நயன்தாரா, அனுஷ்கா, டாப்சியுடன் என்னை இணைத்து செய்திகள் வருகின்றன. இவை வதந்திகள்தான். சினிமா வாழ்க்கை திருப்தியாக உள்ளது. எனக்கு காமெடி இயற்கையாகவே வரும். எனவே அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறேன். கதைகள் கேட்டு எனக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே தேர்வு செய்கிறேன்.

இவ்வாறு ஆர்யா கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum