தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடனாளியாக இருந்து சினிமாவில் உயர்ந்தேன்: ஐதராபாத்தில் கமலஹாசன் பேட்டி

Go down

கடனாளியாக இருந்து சினிமாவில் உயர்ந்தேன்: ஐதராபாத்தில் கமலஹாசன் பேட்டி Empty கடனாளியாக இருந்து சினிமாவில் உயர்ந்தேன்: ஐதராபாத்தில் கமலஹாசன் பேட்டி

Post  ishwarya Sat Mar 16, 2013 4:14 pm


நடிகர் கமலஹாசன் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் 35 வருடங்களுக்கு முன்பு உதவி டான்சராக இருந்தேன். ஐதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டூடியோவில் ஸ்ரீ மந்துரு என்ற தெலுங்கு படத்தில் நடனக் கலைஞராக என் சினிமா வாழ்க்கை துவங்கியது. அப்போது எனக்கு ரூ.250 சம்பளம் கொடுத்தனர். வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றுவதே பெரிய விஷயமாக இருந்தது.

அதன் பிறகு பாலசந்தரின் இன்டிடோங்கலு என்ற படத்தில் சிறு கேரக்டரில் நடித்தேன். அதற்கு ரூ.500 சம்பளம் கிடைத்தது. பின்னர் தமிழில் அவள் ஒரு தொடர் கதை படத்தில் நடித்தேன். அந்த படத்துக்கு ரூ.2500 சம்பளம் பெற்றேன். மரோசரித்திரா படத்தில் நடித்ததற்காக ரூ.40 ஆயிரம் சம்பளம் கிடைத்தது.

அந்த 40 ஆயிரம் பணத்தையும் கேமரா வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுத்துவிட்டேன். எனக்கு சினிமாவில் தொழில் நுட்ப கலைஞராக வேண்டும் என்ற விருப்பம்தான் இருந்தது. நடிப்பது பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் மரோசரித்திரா படம் ரிலீசான பிறகு நிலைமை மாறியது.

எல்லோரும் நான் விசாகபட்டினத்தில் பிறந்ததாகவே கருதினர். கவுதமி கூட உங்களுக்கு விசாகபட்டினமா என்று கேட்டார். ஏக்துஜே கேலியே படத்தில் நடிக்க எல்.வி.பிரசாத் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுத்தார். ஆரம்ப காலங்களில் எனக்கு பண சிக்கல்கள் இருந்தன. ரூ.12 லட்சம் கடன் இருந்தது.

ஏக்துஜே கேலியே படம் ஹிட்டான பிறகு கடன்களையெல்லாம் அடைக்க முடிந்தது. சினிமா உலகம் பொருளாதாரத்தில் என்னை நல்ல நிலையில் வைத்து இருக்கிறது. விஸ்வரூபம் பட பிரச்சினையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனாலும் மனதளவில் புண்பட்டு இருக்கிறேன். நடிகர்களை அவமதிக்க கூடாது.

நான் ஒரு நடிகர், இயக்குனர். ஆனால் வன்முறையாளன் அல்ல. இப்போதும் என்னை நான் ஒரு உதவி இயக்குனராகவே எண்ணுகிறேன். ராஜமவுலி உள்ளிட்ட எல்லா இயக்குனர்களிடம் இருந்தும் நிறைய விஷயங்கள் கற்று கொள்ள விரும்புகிறேன்.

விஸ்வரூபம் பட பிரச்சினையில் பத்திரிகைகள் எனக்கு உதவியாக இருந்தன. சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இருந்து போராடினார். எனக்கு மீண்டும் இதுபோன்ற அவமதிப்பு நேர்ந்தால் வெளியேறுவேன்.

இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum