தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூஜா காந்தி மனமாற்றம்: காதலுடன் இணைகிறார்!

Go down

பூஜா காந்தி மனமாற்றம்: காதலுடன் இணைகிறார்!  Empty பூஜா காந்தி மனமாற்றம்: காதலுடன் இணைகிறார்!

Post  ishwarya Mon May 27, 2013 5:14 pm

சாண்டல்வுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் பூஜா காந்தி. தமிழில் கொக்கி உள்ளிட்ட சில படங்களில் நடிச்சதால் தமிழ் சினிமாவுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கு. பூஜா காந்தி அவ்வப்போது கன்னட தேசத்தில் பரபரப்பு கிளப்புவார். திடீரென்று அரசியல் கட்சியில் சேருவார். பிறகு விலகுவார். ஒரு நாள் கன்னட அரசியல்வாதியும், சினிமா பைனான்சியருமான ஆனந்த கவுடாவை திருமணம் செய்யப்போகிறேன் என்று அறிவித்தார். எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

ஆச்சர்யயம் விலகுவற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தி மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். சில மாதங்கள்தான் கடந்திருக்கும். திடீரென "ஆனந்த கவுடாக என்னை சந்தேகப்படுகிறார். அவரோடு வாழ முடியாது. அவருடன் நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து விட்டேன்" என்று சொல்லி நிச்சயதார்த்த மோதிரத்தை திருப்பி அனுப்பி விட்டார். இப்போது அடுத்த அதிரடியாக மீண்டும் ஆனந்த கவுடாவுடன் காணப்படுகிறார். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாக வருகிறார்கள். கையில் நிச்சயதார்த்த மோதிரம் ஜொலிக்கிறது. கேட்டால் "அப்போ சண்டை போட்டோம். இப்போ சேர்ந்துட்டோம்" என்று ஈசியாக சொல்கிறார். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து என்ன நடக்கிறதுன்னு பார்க்கலாம் என்ற காத்திருக்கிறான் கன்னட ரசிகன்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum