தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டேம்.999 திரைப்படம்: ஒரு கண்ணோட்டம் !

Go down

டேம்.999 திரைப்படம்: ஒரு கண்ணோட்டம் ! Empty டேம்.999 திரைப்படம்: ஒரு கண்ணோட்டம் !

Post  ishwarya Tue Apr 09, 2013 6:21 pm

தமிழக அரசியலில் தற்போது அடிபடத் தொடங்கியுள்ளது ஒரு திரைப்படம். பெயர் டேம்-999. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது என்று கூறும் தமிழக அரசியல் கட்சிகள், திரைப்படத்துக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.ம.தி.மு.க. ஆரம்பத்தில் இந்தத் திரைப்படம் குறித்து குரல் எழுப்பியது. திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. அதையடுத்து, பா.ம.க.-வும் டேம்-999 பற்றிய சர்ச்சையில் குரல் கொடுத்தது.

வைகோ, இந்தத் திரைப்படம் தமிழத்துக்கு தண்ணீர் கொடுக்கும் முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும் என்பதைக் கூறும் பிரச்சார நோக்கத்துடன் கேரளாவைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது, இரு மாநிலங்களுக்கும் இடையே முல்லைப் பெரியாறு அணை தொடர்பான 999 ஆண்டுகால ஒப்பந்தம் ஒன்று அமலில் உள்ளது. அதைக் குறிக்கும் விதத்தில், டேம்-999 என்று திரைப்படம் பெயரிடப் பட்டுள்ளது என்பது வைகோவின் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் உள்ள தென்னிந்திய திரைப்பட அமைப்புகளிடம் திரைப்படம் குறித்து புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள வைகோ, தமது எதிர்ப்பையும் மீறி திரைப்படம் தமிழத்தில் திரையிடப்பட்டால், திரையிடப்படும் தியேட்டர்களின் முன் தமது கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். பா.ம.க.-வின் டாக்டர் ராமதாஸ், டேம்-999 திரைப்படம் குறித்து மத்திய அரசுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசவேண்டும் என்று தெரிவித்திருந்தார். ம.தி.மு.க., மற்றும் பா.ம.க. ஆகிய இரு கட்சிகளும் குரல்கொடுத்த நிலையில் அடுத்த திருப்பமாக, தமிழகத்தின் பெரிய கட்சிகளான அ.தி.மு.க.-வும், தி.மு.க.-வும், இந்த திரைப்படம் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போவதாக கூறியுள்ளன. அதையடுத்து சர்ச்சை பெரிதாக மாறியிருக்கிறது.

தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, முல்லைப் பெரியாறு அணை உடைவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுளதன் காரணம், தமிழகத்தில் மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே என்று தெரிவித்ததுடன், அணை உடைப்பு எடுப்பதால் ஏற்படும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைவதைப் போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பின்னணியில் கேரள அரசின் தலையீடு உள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது� என்று கேரள அரசை நேரடியாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த திரைப்படம் தொடர்பாக தி.மு.க. ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. மனு செய்துள்ளது.

அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை, முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படமாக்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம் என்றார். மொத்தத்தில் தமிழகத்தின் சிறிய பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இன்றி பிரதான கட்சிகள் டேம்-999 திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விஷயம் டில்லியில் நாடாளுமன்றம் வரை பைசல் செய்யப்பட சென்றிருக்கிறது. இவர்கள் குறிப்பிடும் டேம்-999 திரைப்படம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை (வியாழக்கிழமை) வெளியாகின்றது. இந்தியாவில் 25-ம் தேதியும், ஸ்ரீலங்காவில் 26-ம் தேதியும் வெளியிடப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. திரைப்படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு மொழிகளில் டப் செய்யப்படுகின்றதா என்பது குறித்த தகவல் ஏதுமில்லை.

டேம்-999 திரைப்படத்தின் பிளாட் என்ன ? ஊழல்வாதியான மேயர் ஒருவரால் அமைக்கப்பட்ட பலமற்ற அணைக்கட்டு ஒன்று உடைந்து போவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது போன்ற காட்சிகள் படத்தில் வருவது நிஜம்தான். ஆனால், படத்தின் தீம் என்ன? இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் 9 கேரக்ட்டர்களுக்கு, 9 வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் ஏற்படும், 9 வெவ்வேறு விதமான உணர்வுகளை காட்டுவதுதான் படத்தின் தீம். (999 என்பதை இப்படியும் அர்த்தம் செய்து கொள்ளலாம்) கதையில் வரும் 9 கேரக்டர்களும், தனது தங்கையை காப்பாற்ற துடிக்கும் அண்ணன் (1-2), இணையத் துடிக்கும் இரு காதலர்கள் (3-4), குடும்பத்துடன் மீண்டும் சேர விரும்பும் பெண் (5), உயிர் கொல்லி நோயால் அவதியுறும் சிறுவன் (6), மரணத்திலும் கணவனுடன் இணைய விரும்பும் விசுவாச மனைவி (7.Cool, நடக்கப்போவதை ஜோசியத்தால் அறிந்துகொள்ளும் ஜோசியக்காரர் (9).

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum