தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா'

Go down

விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா' Empty விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா'

Post  ishwarya Fri Mar 22, 2013 4:54 pm



"மனம் கொத்திப் பறவை' படத்துக்குப் பின் எழில் இயக்கும் படம் "தேசிங்கு ராஜா'. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். ""ரீலுக்கு ரீல் காமெடி மட்டும் பிரதானமாக இருக்கும். விமல் பெயரைக் கேட்டாலே சிரிப்பு வரும். இதயக்கனி. பிந்துமாதவிக்கு பெயர் தாமரை.

படத்துக்கு முதலில் தாமரைக்கனி என பெயர் வைத்தோம். எதற்கு பிரச்னை என்று தேசிங்கு ராஜா என்று மாற்றி விட்டேன். தன் பெயர் இதயக்கனி என்பதால் எம்.ஜி.ஆர். மீது அத்தனை பற்றுள்ளவராக இருப்பார் விமல். எம்.ஜி.ஆர். பாட்டைப் போட்டாலே போதும் கொடுத்த கடனை கூட திருப்பிக் கேட்காமல் போய் விடுவார். பிந்து மாதவி கேரக்டர், ரஜினி படத்துக்கு ஏறி குதித்து டிக்கெட் எடுக்கிற அடாவடி வால்ப் பொண்ணு.

இதுவெல்லாம் கலகலப்பாக இருக்க, அப்படி இப்படியென இதில் கதையும் இருக்கிறது. கூடவே சின்ன மெசேஜூம் இருக்கிறது. படத்துக்கு காமெடி பஞ்சம் இல்லையென்றாலும் படத்தின் தொடக்கத்திலேயே பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். அதுதான் மொத்த திரைக்கதைக்குமான உயிர் நாடி. நினைத்தால் முழு நேர ஆக்ஷன் படமாகவே செய்திருக்கலாம். ஆனால் இப்போது காமெடிதானே தமிழ் சினிமாவின் பூஸ்டர்'' என்கிறார் எழில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum