தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரமன் படத்தில் அமீர்

Go down

விக்ரமன் படத்தில் அமீர் Empty விக்ரமன் படத்தில் அமீர்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:51 pm



புதுவசந்தம், சூர்யவம்சம், வானத்தைப்போல, பூவே உனக்காக போன்ற தரமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கிய விக்ரமன் இப்போது, ‘நினத்தது யாரோ’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

இதில் புதுமுகங்கள் ரிஜித் நாயகனாகவும், நிமிஷா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், டி.இமானுவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பால்ராஜ் இசையமைக்கிறார்.

இது முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்ட திரைப்படம். இந்தப் படத்தில் இயக்குனரும் நடிகருமான அமீர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். படத்தில் அவர் இயக்குனர் அமீராகவே வருகிறார். அதில் நடிகை மோனிகாவை வைத்து இயக்குவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இனியாவும் ஒரு காட்சியில் நடிகையாக வருகிறார்.

விக்ரமன் இயக்கத்தில் வெளியான மரியாதை, சென்னைக்காதல் ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நினத்தது யாரோ’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum