தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை

Go down

பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை Empty பாரதிராஜா படத்தில் அமீர் இல்லை

Post  ishwarya Tue Mar 26, 2013 2:05 pm



பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் இல்லை என்று பாரதிராஜா தெளிவாகக் கூறிவிட்டார். மேலும், இப்படத்தின் கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அமீர் இப்படத்தில் இல்லை என்றும், எனது அடுத்த படத்தில் அமீர் நிச்சயம் இடம்பெறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சினையில் முக்கிய காரணகர்த்தாவாக இருப்பதால்தான் அமீரை பாரதிராஜா தனது படத்தில் இருந்து நீக்கியதாக வந்த செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

ஏற்கனவே இப்படத்தில் பார்த்திபன் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் அவரை நீக்கிவிட்டு அமீரை ஒப்பந்தம் செய்தார் பாரதிராஜா. இப்போது அமீரும் நீக்கப்பட்டுவிட்டார்.

அடுத்து அந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா தனது மகன் மனோஜையே நடிக்க வைக்க வாய்ப்பிருப்பதாக படக்குழுத் தெரிவித்துள்ளது.

இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகாவும், வாகை சூட வா பட நாயகி இனியாவும் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகை ரோஜா மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தேனி அருகே உள்ள கிராமங்களில் எடுக்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum