தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ராஜசுலோச்சனா காலமானார்

Go down

நடிகை ராஜசுலோச்சனா காலமானார் Empty நடிகை ராஜசுலோச்சனா காலமானார்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:13 pm

பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா (77) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

இதய, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த ராஜசுலோச்சனா, சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சில நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாகக் கொண்டவர் ராஜசுலோச்சனா. சிறு வயது முதலே நடிப்பின் மீது இருந்த பற்றால், முறைப்படி நடனம் கற்று கலையுலகுக்கு வந்தார். 16-ம் வயதில் ஏவி.எம். நிறுவனத்தின் கம்பெனி நடிகையாக ஒப்பந்தம் ஆனார். 1954-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த "மாங்கல்யம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து "சத்திய சோதனை', "நல்லவன் வாழ்வான்', "ரங்கூன் ராதா', "படித்தால் மட்டும் போதுமா', "ராஜா ராணி' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட அப்போதைய பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் 60 படங்களில் நடித்துள்ள ராஜசுலோச்சனா ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு பட இயக்குநர் சி.புல்லையாவின் மகன் சி.எஸ்.ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். ராவின் மரணத்துக்குப் பின் சிறிது காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த "எங்க வீட்டு வேலன்' அவர் நடித்த கடைசிப் படம்.

அவருக்கு ஷியாம் சுந்தர் என்ற மகனும், ஸ்ரீ, தேவி ஆகிய இரட்டையர் மகள்களும் உள்ளனர். ஷியாம் சுந்தர், ஸ்ரீ ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். தேவி சென்னை அருகே படூரில் வசிக்கிறார்.

இறுதிச் சடங்கு: பொதுமக்களின் அஞ்சலிக்காக மடிப்பாக்கம் ராம்நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜசுலோச்சனாவின் உடலுக்கு நடிகர்கள் ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், கே.ஆர்.விஜயா, நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

புதன்கிழமை (மார்ச் 6) பிற்பகல் 1 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum