சாதகமான தீர்ப்பு வராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்! உண்ணாவிரதத்தை முடித்த அமீர் பேட்டி!!
Page 1 of 1

இலங்கை தமிழர் விவகாரத்தில், ஐ.நா.வில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானம் சாதகமாக இல்லாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என பெப்சி தலைவரும், இயக்குனர் சங்க பொதுச்செயலாருமான டைரக்டர் அமீர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் அப்பாவி தமிழகர்கள் சுமார் லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பேர் வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து வாழ கூட வழியின்றி தவித்து வருகின்றனர். இலங்கையில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவங்கள் குறித்து சேனல் 4 தொலைக்காட்சியும் அவ்வப்போது படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் 12வயது சிறுவன் பாலசந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட போட்டோக்கள் இந்த பிரச்னையை விஸ்வரூபமாக்கியது. இதற்கிடையே ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். .
மாணவர்கள் எழுச்சி : இதுநாள் வரை அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தநிலையில், சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் துவங்கி வைத்த போராட்டம் இன்று ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இலங்கை தமிழர்கள் விவகாரத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜெனிவாவில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தியும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலகினரும் இந்த போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்
இயக்குனர் சங்கம் போராட்டம் : தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கூட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இலங்கை மீதான பொருளாதார தடை, ஐ.நா.வில் கொண்டு வரப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது, தமிழர் பகுதியில் வசிக்கும் சிங்களர்களை உடனடியாக வெளியேற்றுவது, ராஜபக்ஷேயை போர்குற்றவாளியாக அறிவிப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துடன், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், பாடலாசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட 30 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இளையராஜா பேசுகையில், இங்கு உண்ணாவிரதம் இருப்பவர்களின் உணர்வு என்னவாக இருக்கிறதோ, அதே உணர்வு தான் தனக்கும் இருப்பதாக கூறினார்.
சரத்குமார் பேசுகையில், தனி ஈழம் அமைவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது, இதுவே சரியான நேரம், உடனடியாக தனி ஈழம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
போராட்டம் தொடரும் : காலை முதல் நடந்த வந்த இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணியளவில் முடிந்தது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். பிறகு பேசிய டைரக்டர் அமீர், ஜெனிவாவில் நடக்கும் மாநாட்டில் சாதகமான தீர்ப்பு வராவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என்றும், எந்த ஒரு அரசியல் கட்சியினரின் பேரில் இந்த போராட்டம் நடைபெறவில்லை என்றும், இது தமிழர்களின் உணர்வும் என்றும், இதை புரிந்து கொண்டு இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.
10ஆயிரம் பங்கேற்பு : இந்த உண்ணாவிரத போராட்டத்தில் டைரக்டர் சங்கம், பெப்சி உள்ளிட்ட உறுப்பினர்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் பங்கேற்றதாக டைரக்டர் சுப்ரமணிய சிவா தெரிவித்துள்ளார். 5ஆயிரம் பேர் உண்ணாவிரத பந்தலிலும், மீதம் 5 ஆயிரம் போராட்டத்தில் பங்கேற்று விட்டு சென்றாக அவர் தெரிவித்தார்.
டைரக்டர் அமீர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இசைஞானி இளையராஜா, மூத்த டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், வஸந்த், ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பாகன் டைரக்டர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா, ராஜ்கபூர், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி, பாடல் ஆசிரியை தாமரை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகர் சங்கம் தனி போராட்டம் : இன்றைய போராட்டத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட ஒருசிலரை தவிர, நடிகர் சங்கத்தை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் யாரும் பெருவாரியாக கலந்து கொள்ளவில்லை. நடிகர் சங்கம் தனியாக ஒரு போராட்டம் நடத்துவாக உள்ளார்கள், அதனால் பெருவாரியான நடிகர்கள் பங்கேற்கவில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தலிபான்களுடன் விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேட்டி: டைரக்டர் அமீர் வீடு முற்றுகை- இந்துமக்கள் கட்சியினர் 21 பேர் கைது
» விசாரணைக்கு வராவிட்டால்.. ரஞ்சிதாவுக்கு போலீஸ் எச்சரிக்கை
» மலேசியாவில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்..!
» எண்பது தினங்களில் பரதேசியை முடித்த பாலா
» நீதிமன்றம் உத்தரவு - உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார் சீனு ராமசாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum