நீதிமன்றம் உத்தரவு - உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார் சீனு ராமசாமி
Page 1 of 1
நீதிமன்றம் உத்தரவு - உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கினார் சீனு ராமசாமி
நீர்ப்பறவை படத்துக்கு வரி விலக்கு அளிக்கக் கோரி இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சீனு ராமசாமி தெரிவித்திருந்தார். இதனிடையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்ததால் தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சீனு ராமசாமி தெரிவித்தார்.
தமிழில் பெயர் இருக்க வேண்டும், சென்சாரில் யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டும்தான் வரிவிலக்குக்கான விதிமுறைகள். அந்தவகையில் நீர்ப்பறவை படம் வரி விலக்குக்கு முழுத்தகுதி பெற்றது. ஆனால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடியாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிராகரித்தனர். ரெட்ஜெயண்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை தயாரித்திருப்பதால்தான் இந்த நிராகரிப்பு என பல தரப்பினரும் கூறி வந்தனர். உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும் வரி விலக்கு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கோரி சீனு ராமசாமி இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தெரிவித்தார். ரெட் ஜெயண்ட் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடியாது என்ற முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக இன்று நடத்தவிருந்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக சீனு ராமசாமி தெரிவித்தார்.
நீர்ப்பறவை, சீனு ராமசாமி உண்ணாவிரதம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சீனு ராமசாமி இயக்கத்தில் விமல்
» ஹீரோக்களுடன் கதை விவாதத்தில் சீனு ராமசாமி
» வர்ஷாவை ஏமாற்றிய சீனு ராமசாமி?
» முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம்
» வரி விலக்கு - சீனு ராமசாமி உண்ணாவிரதப் போராட்டம்
» ஹீரோக்களுடன் கதை விவாதத்தில் சீனு ராமசாமி
» வர்ஷாவை ஏமாற்றிய சீனு ராமசாமி?
» முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம்
» வரி விலக்கு - சீனு ராமசாமி உண்ணாவிரதப் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum