கோதுமை ரவா உப்புமா
Page 1 of 1
கோதுமை ரவா உப்புமா
தேவையானப்பொருட்கள்:
கோதுமை ரவா - 1 கப்
பெரிய வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கோதுமை ரவாவைப் போட்டு, சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணையை விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப்போட்டு, பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், 2 கப் தண்ணீரும், உப்பும் சேர்த்துக் கலக்கி மூடி வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவாவைக் கொட்டிக் கிளறவும். அடுப்பைத் தணித்து, மூடி வைத்து வேக விடவும். அவ்வப்பொழுது, திறந்து கிளறி விட்டு, நீர் வற்றி உப்புமா நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கோதுமை ரவை உப்புமா
» டயட் கோதுமை உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவை உப்புமா
» டயட் கோதுமை உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவா உப்புமா
» கோதுமை ரவை உப்புமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum