கோதுமை ரவை உப்புமா
Page 1 of 1
கோதுமை ரவை உப்புமா
காலை வேளையில் வேகமாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதேனும் சமைக்க வேண்டுமென்றால், அதற்கு போதுமை ரவை உப்புமா மிகவும் சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த கோதுமை ரவை உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 2
இஞ்சி - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.
பிறகு அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.
இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum