ஜவ்வரிசி உப்புமா
Page 1 of 1
ஜவ்வரிசி உப்புமா
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- ஜவ்வரிசி – 2 கப்
- வெங்காயம் – 1
- உருளைக்கிழங்கு – 1
- காரட் – 1
- பச்சை மிளகாய் – 3 அல்லது 4
- வேர்க்கடலை – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூண்
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லித் தழை – சிறிது
- எலுமிச்சம் பழச்சாறு – 1 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
- ஜவ்வரிசியைக் கழுவி விட்டு, நீரில் 1 முதல் 2 மணி நேரம் ஊறவிடவும்.
பின்னர் தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து
வைத்துக் கொள்ளவும். - உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து விட்டு, சிறு துண்டுகளாக
வெட்டவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு அத்துடன் சீரகம்
சேர்த்து, சீரகம் பொரிந்தவுடன் அதில் உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டு
ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும். - வெங்காயம், பச்சை மிளகாய் அக்கியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி ஓரிரு நிமிடங்கள்
வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். - வேர்க்கடலையின் தோலை நீக்கி விட்டு ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்நததும் கடுகு போடவும். கடுகு
வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க
வறுக்கவும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச்
சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் ஊற வைத்த ஜவ்வரிசி,
காரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி மூடி போட்டு மிதமான தீயில்
ஓரிரு நிமிடங்கள் வேக விடவும். மூடியைத் திறந்து, மீண்டும் ஒரு முறை
நன்றாகக் கிளறி விட்டு பின்னர் அதில் வதக்கிய உருளைக்கிழங்கு, பொடித்த
வேர்க்கடலை, எலுமிச்சம் சாறு கலந்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum