மாங்காய் பருப்பு கறி
Page 1 of 1
மாங்காய் பருப்பு கறி
தேவையான பொருள்கள்:
மாங்காய் = கால் கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம்
பெருங்காயம் = சிறிது
மிளகாய் பொடி = கால் ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
வெங்காயம் = 1
பச்சை மிளகாய் = 4
தேங்காய் = கால் மூடி
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை தோல் சீவி கொட்டையை நீக்கி விட்ட பின் அரை அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வைத்து வேக வேக விடவும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கவும். தேங்காய் துருவி அரைத்துக் கொள்ளவும்.
முதலில் வாணலியில் மாங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிறிது வதக்கி அரை கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். மிளகாய் பொடி சேர்க்கவும். நடுவில் 2 முறை கிளறி விடவும்.
வெந்ததும் அரைத்த தேங்காயை சேர்த்துக் கிளறவும். அடுத்து பருப்பையும், கொத்தமல்லியையும் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சுவையான மாங்காய் பருப்பு கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
மாங்காயில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தம், அழற்சி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்க செய்கிறது.
வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நீரிழிவு, இரத்தகொதிப்பு போன்ற நோய்கள் குறையும். உடல் வலி மற்றும் தோல் நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum