இஷா தியோல் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி!
Page 1 of 1
இஷா தியோல் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி!
சமீபத்தில் நடந்த ஜெனிலியா-ரித்தேஷ் காதல் திருமணம் போல் பாலிவுட்டில் இன்னொரு நடிகையும் தன் காதலனை கைப்பற்றியுள்ளார். பாலிவுட் கனவுக்கன்னி ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், தனது காதலரான பரத் தக்தனி என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். மும்பை தொழிலதிபர் பரத் தக்தனியும், இஷா தியோலும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். தற்போது இவர்களின் காதலுக்கு, இவர்களுடைய பெற்றோர்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் (12-02-12) அன்று மும்பையிலுள்ள ஹேமமாலினியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இவர்களுடன் பாலிவுட் பிரபலமான ஜெயா பச்சனும் கலந்து கொண்டார். இஷா தியோல் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழில் இயக்குநர் மணிரத்னம் படமான 'ஆய்த எழுத்து' படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் பிரபலமான தர்மேந்திரா-ஹேமமாலினியின் மகள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஷா தியோல் திருமணத்தில் சல்மான்கான் ‘பாடிகார்ட்!’
» இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர்
» மூன்று பேர் ஒரு காதலுக்கு யு
» காதலுக்கு உதவுவது காமெடியன்கள்தான்: விவேக்
» காதலி பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?
» இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர்
» மூன்று பேர் ஒரு காதலுக்கு யு
» காதலுக்கு உதவுவது காமெடியன்கள்தான்: விவேக்
» காதலி பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum