காதலி பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?
Page 1 of 1
காதலி பைத்தியமாவது காதலுக்கு வெற்றியா?
காதல் இல்லாத மனித வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஆனால் காலப்போக்கில் காதலின் நிறம் மாறிவருகிறது. காதலித்த ஆண் பிரிந்துவிட்டால் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிடும் நிலை அப்போது அதிகமாக இருந்தது. கிராமங்களில் ஒரு சில பெண்களைக் காட்டி, அவர்கள் காதல் பிரிவு காரணமாக பைத்தியமானவர்கள் என்று சொல்வார்கள்.
அப்போது விரக்தி, மனச்சிதைவு, தற் கொலை போன்ற பல இன்னல்களுக்கு காதலர்கள் ஆளானார்கள். அந்தக் காலத்தில் சாதி, மதம் என்று காதலுக்கு பல தடைகள் இருந்தன. அதனால் எப்போதாவது ஒரு காதல் ஜோடியே வெல்லும் அளவுக்கு காதல் தோல்விகள் நிறைய இருந்தன.
இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்போ தெல்லாம் சாதி மதத்தை காரணம் காட்டி யாரையும் தடுக்க முடியாது. பெயரை மாற்றிக்கொண்டே, ஊரை மாற்றிக்கொண்டே வாழ்ந்து காட்டிவிடுவார்கள். சினிமாக்கள் காதலை பல்வேறு கோணங்களில் தோலுரித்துக்காட்டியது. அதனால் காதல் தோல்வி என்ற மாயை அகன்றது. அதனால் காதலில் தோல்வி அடைந்தாலும், மனம் சிதைந்து பைத்தியம வது வெகுவாக குறைந்து வருகிறது.
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் வந்து போகின்றன. அதில் காதலும் ஒன்று. காதல் வென்றாலும் அது வாழ்க்கை வெற்றி அல்ல! காதலில் தோல்வி அடைந்தாலும் அது வாழ்க்கை தோல்வி அல்ல என்பதை இளம் பெண்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் காதலுக்காக, தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை.
இன்றைய இளைய தலைமுறை மனதை பக்குவப்படுத்திக் கொண்டுதான் காதலிக்க ஆரம்பிக்கிறது. காதலைத் தவிர இந்த உலகத்தில் தங்களுக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன என்பதை இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தரமான காதல் சினிமாக்கள் வந்தால் பார்த்து ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.
காதலர் தினம் என்ற பெயரில் கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு வீதி வீதியாய் அலைய இன்றைய இளைஞர்கள் தயாரில்லை. காரணம் அப்படி அலைபவர்கள் நல்ல காதலர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்துகொண்டதுதான். வருடத்திற்கொரு துணையை தேடுவது, திருமணத்திற்கு முன் கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் பழகுவது, இரவு நேரங்களில் ஓட்டல்களில் ஜோடி ஜோடியாக ஆட்டம் போடுவது..
இவைகள் எல்லாம் நல்ல காதலின் அடையாளம் அல்ல என்பதை இளைய தலைமுறை புரிந்துகொண்டுவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், உடனே மற்றவர்கள் ‘அவருக்கு காதல் தோல்வியாக இருக்கும் என்பார்கள். இப்போது அப்படி சொல் வதில்லை. ஏன்என்றால், காதலில் தோற்றவர்கள் இப்போது வாழ்க்கையில் போராடி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதல் தோல்வி என்றால் மனம் நொறுங்கிப் போகாதீர்கள். விரக்தியில் அலைந்து, ‘ஏன் காதல் தோல்வி ஏற்பட்டது?’ என்று ஆராய்ச்சி செய்து பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். அப்படியே அதை விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். காலம், எப்படிப்பட்ட காதல் காயத்தையும் ஆற்றி, உங்களை அபாரமான மனிதராக்கிவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேட்டைக்காரன் வெற்றியா? – சில உண்மைகள்
» த்ரி படம் வெற்றியா தோல்வியா : ஒரு உண்மை தெரிஞ்ஜாகணும்
» மூன்று பேர் ஒரு காதலுக்கு யு
» காதலுக்கு உதவுவது காமெடியன்கள்தான்: விவேக்
» இஷா தியோல் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum