ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவரா? - அனன்யா அதிர்ச்சி!
Page 1 of 1
ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவரா? - அனன்யா அதிர்ச்சி!
நாடோடிகள்', 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகையான அனன்யாவுக்கும், கேரளாவைச் சார்ந்த தொழிலதிபரான ஆஞ்சநேயன் என்பவருக்கும் கடந்த வாரம் திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பெரும் பணக்காரரான ஆஞ்சநேயன், படப்பிடிப்பு தளங்கள், பொது நிகழ்ச்சிகள் என்று அனன்யா எங்கு சென்றாலும் அங்கு சென்று அவரை காதலிப்பதாக வற்புறுத்தி வந்தாராம். ஒரு கட்டத்தில் அனன்யாவும் அவர் காதலை ஏற்றுகொள்ள இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆஞ்சநேயன் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் காவல் நிலையத்தில் ஆஞ்சநேயன் மீது புகாரும் அளித்திருக்கிறார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல், திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி ஆஞ்சநேயனிடம் போலீசார் விசாரித்ததில், ஏற்கனவே திருமணமானதை ஒப்புக்கொண்ட ஆஞ்சநேயன், முதல் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையால் அதிர்ச்சியடைந்திருக்கும் அனன்யா வீட்டிலேயே முடங்கியிருக்கிறாராம். பாத்தாலே தெரியுதே.. ஆளுக்கும் பேருக்கும் சம்பந்தமேயில்ல.... அம்ணி எப்புடி ஏமாந்தீக...?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆஞ்சநேயன் ஏமாற்றவில்லை: திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் – நடிகை அனன்யா
» 2வது மனைவியாகவும் அனன்யா ரெடி?
» எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
» ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர்
» முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை திருமணம் செய்ய முயற்சி! தொழிலதிபர் ஆஞ்சநேயன் மீது புகார்!!
» 2வது மனைவியாகவும் அனன்யா ரெடி?
» எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
» ஏற்கனவே தேனிலவு முடிந்துவிட்டது! – புதுப்பெண் கரீனா கபூர்
» முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை திருமணம் செய்ய முயற்சி! தொழிலதிபர் ஆஞ்சநேயன் மீது புகார்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum