தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஞ்சநேயன் ஏமாற்றவில்லை: திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் – நடிகை அனன்யா

Go down

ஆஞ்சநேயன் ஏமாற்றவில்லை: திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் – நடிகை அனன்யா Empty ஆஞ்சநேயன் ஏமாற்றவில்லை: திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் – நடிகை அனன்யா

Post  ishwarya Fri Apr 05, 2013 5:32 pm

ஆஞ்சநேயன் ஏமாற்றவில்லை: திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் – நடிகை அனன்யா 21b7d104-929a-4397-aa81-972dfec2b2c1_S_secvpf.gifநடிகை
அனன்யாவுக்கும், கேரள தொழில் அதிபர் ஆஞ்ச நேயனுக்கும் சமீபத்தில் திருமண
நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் ஆஞ்ச நேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற
பரபரப்பு தகவல் வெளியாகியது. அனன்யா பெற்றோர் போலீசில் புகார் அளித்து
ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது.

ஆஞ்ச நேயனைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் செய்ததால் அனன்யாவை
வீட்டுக்காவலில் வைத்திருப்பதாகவும் தகவல் பரவியது. இதற்கு பதில் அளித்து
அனன்யா அளித்த பேட்டி வருமாறு:-

என்னை பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதவை.
ஆஞ்சநேயன் திருமணமானவர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் என்னை
ஏமாற்றவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினோம். திருமணம் செய்து
கொள்ளவும் முடிவெடுத்தோம்.

ஆஞ்சநேயன் தனக்கு திருமணம் நடந்தது பற்றியும், அது எவ்வாறு முறிந்தது
என்பது பற்றியும் என்னிடம் விளக்கி சொல்லி விட்டார். பத்திரிகைகளில்
அவருக்கு குழந்தைகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை.
அவருக்கு குழந்தைகள் இல்லை. எங்களை சுற்றி இல்லாததும், பொல்லாததுமான
வதந்திகள் பரவியுள்ளன.

இதன்மூலம் எங்கள் காதல் மேலும் வலுவடைந்து உள்ளது. எனது பெற்றோர்
திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆஞ்சநேயனுடன் தொடர்பு வைத்துக்
கொள்ளக்கூடாது என்று என்னிடம் வலியுறுத்தியதாகவும் வெளியான செய்திகள்
தவறானவை.

திருமணமானவராக இருந்தாலும் பரவாயில்லை. அவரை மணக்க தடையில்லை என்று
பெற்றோர் என்னிடம் கூறிவிட்டனர். அப்படி இருக்க எப்படி இதனை
பிரச்சினையாக்குவார்கள். எங்கள் திருமண தேதியை விரைவில் முடிவு செய்து
அறிவிப்போம்.

இவ்வாறு அனன்யா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum