ஏப்ரல் 30 வரை புதுசுக்கு தடை!
Page 1 of 1
ஏப்ரல் 30 வரை புதுசுக்கு தடை!
சினிமா தொழிலாளர்கள் சங்கமான 'பெப்சி' சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியது. உண்ணாவிரதமும் இருந்தார்கள். புதிய ஊதிய விகிதத்தையும் அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். அதை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அரசு தொழிலாளர் நல ஆணையம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சில சங்கங்களுக்கு சம்பளம் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கார்த்தியன், அலெக்ஸ்பாண்டியன், விதார்த் நடித்த 'காட்டு மல்லி' படப்பிடிப்புகளை 'பெப்சி' தொழிலாளர்கள் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் சமரச பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டுள்ளது. பெப்சிக்கு எதிராக புதிய சங்கம் துவங்கப் போவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஏப்ரல் 30-ந்தேதி வரை புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எதுவும் துவங்கப்படக் கூடாது. தற்போதைய படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறலாம். மே 2-ந்தேதியில் இருந்து தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் புதிதாக அமைக்க உள்ள தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்த தொழிலாளர்களோடு மட்டுமே நடைபெற வேண்டும். இந்த முடிவுகளை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து பெப்சி செயலாளர் டி. சிவாவிடம் கேட்டபோது, பெயர் இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாங்கள் அரசை நம்புகிறோம். அரசு தரப்பில் நடக்கும் பேச்சுவார்த்தையிலும் பங்கெடுத்து வருகிறோம். பெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் கலகமூட்ட சில சக்திகள் முயற்சிக்கின்றன. அது யார் என்பது விரைவில் அடையாளம் காணப்படும் என்றார். என்னைக்குதான் முடிப்பீங்க ஒங்க பிரச்சினைய.....?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏப்ரல் 5ல் டைட்டானிக் 3டி
» ஏப்ரல் 6ல் ஒரு கல் ஒரு கண்ணாடி
» ஏப்ரல் 14-ல் சகுனி!
» ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்
» ஏப்ரல் 6 முதல் ஐஸ்வர்யா படம்?
» ஏப்ரல் 6ல் ஒரு கல் ஒரு கண்ணாடி
» ஏப்ரல் 14-ல் சகுனி!
» ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்
» ஏப்ரல் 6 முதல் ஐஸ்வர்யா படம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum