ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
Page 1 of 1

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு
இருந்தது போல் சித்திர பிரகாரமாக புதுப்பொலிவு பெற்று வருகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம் நூறு ஆண்டுகளுக்கு
முன்பு வரை சித்திர பிரகாரமாக விளங்கியது. மேற்கூரை, தூண்கள், சிற்பங்கள்,
சிலைகள் என அனைத்தும் பலவித வர்ணங்களில் சித்திர வேலைப்பாடுகளுடன் இருந்தன.
முறையான பராமரிப்பு இல்லாததாலும், கடல் உப்பு காற்றாலும் சிலைகளில் இருந்த
சுண்ணாம்பு சுதை சிற்பங்கள் நாளடைவில் சிதிலமடைந்தன.
வர்ண
சாயங்களினால் பிரகாரத்தின் மேற்கூரையில் மட்டும் புராணங்களை விளக்கும்
ஓவியங்கள், இயற்கை காட்சிகள் வரையப்பட்டன. 1975ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்
போது, சிதைவடைந்திருந்த சிறிய சிற்பங்கள் அகற்றப்பட்டன. தூண்களில் ஒரே
வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்டது. மேற்கூரை ஓவியம்
மற்றும் தூண்களில்
உள்ள சிலைகளுக்கு மட்டும் பல வர்ணத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது. கடந்த
2001 கும்பாபிஷேகத்தின் போதும் இம்முறையே பின்பற்றப்பட்டது.
தற்போது
2014ல் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மூன்றாம்
பிரகாரத்தை பல லட்சம் ரூபாய் செலவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு
இருந்தது
போல் பலவண்ண சித்திர பிரகாரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரகாரத்தின் மேற்கூரையில் ஓவியங்கள் வரையும்
பணி முடிந்துள்ளது. தூண்களில் உள்ள சிற்பங்கள், சிலைகள், தூண்களுக்கு
இடையிலுள்ள சுதை சிற்பங்களில் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்து பல வண்ண
பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. மூன்றாம் பிரகாரத்தை தொடர்ந்து
திருக்கல்யாண மண்டபம், நவசக்தி மண்டபத்திலும் வர்ணம் அடிக்கும் பணி
விரைவில் துவங்க உள்ளது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
» ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் விழாக்கள்
» ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை
» அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம்
» திருப்பதி கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum