தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம்

Go down

அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம் Empty அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில் -ராமேஸ்வரம்

Post  meenu Fri Jan 18, 2013 12:29 pm

காசிக்கு அடுத்த சிறந்த தீர்த்த ஸ்தலமாக கருதப்படுவது ராமேஸ்வரம். தென்தமிழ்நாட்டின், கோடியில் உள்ளது ராமேஸ்வரம். இங்கு எழுந்தருளியிருப்பவர்அருள்மிகு ராமநாத ஸ்வாமி. இந்த கோவிலின் மூலவர் ராமநாத ஸ்வாமி.

அம்பாள் - பர்வதவர்த்தினி. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிலிங்கத்தையும் அதன் கோபுரத்தையும் குறிப்பிடும் விதமாக அந்த கோபுரங்கள், 12லிங்கங்கள் அமைந்துள்ள துவாதச மண்டமும் இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள தனி சிறப்பாகும்.

இந்த கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மிகப்பெரிய கோபுரங்கள்,மிகப் பெரிய நந்தி, உலகிலேயே நீளமான 4,000 அடி நீளமுள்ளபிரகாரம், கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் 22 புண்ணிய தீர்த்தங்களும் கோவிலின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பவை ஆகும்.

ஸ்தல வரலாறு:

இந்த கோவிலில் அமைந்திருக்கும் சிவலிங்கம் ராமரால் பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ராவணானால் கடத்தப்பட்டசீதையை மீட்பதற்காக சென்ற ராமபிரான் ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்தார்.

ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி சாபத்தை போக்கிக்கொள்ள ராமர் பூஜை செய்த தலம் இந்த திருத்தலம் என்று வரலாறு கூறுகிறது.. பூஜை செய்வதற்காக ராமபிரான் அனுமனிடம் கைலாசத்திலிருந்து லிங்கத்தை எடுத்து வரச் சொன்னார். நேரம் சென்று கொண்டே இருந்தது. அனுமன் வரவில்லை.

பூஜைக்குரிய நல்ல நேரம் செல்வதற்குள் பூஜை நடத்தப்பட வேண்டும் என்பதால் சீதை மண்ணால் செய்யப்பட்டமூல லிங்கத்தை செய்து கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்தார்.அந்த நேரம் கைலாசத்திலிருந்து விஸ்வ லிங்கத்துடன் அனுமன் வந்து சேர்ந்தார்.

மூல லிங்கத்தைக் கண்டு கோபம் கொண்ட அனுமன் அதை மண்ணிலிருந்து எடுக்க முயன்றார்.அனுமனை சமாதானப்படுத்திய ராமர், அனுமன் கொண்டு வந்த விஸ்வ லிங்கத்திற்கு பின்பு தான் மூல லிங்கத்திற்கு பூஜை செய்யப்படும் என கூறினார்.

அதனால் இன்றும் அந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மூலவரைத் தவிர இந்த கோவிலில் விஸ்வநாதர், விசாலாட்சி, பர்வதவர்த்தினி, சுப்ரமணியர், சேதுமாதவன்,நடராஜன், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, சகஸ்ரலிஙகம், ஜோதிர்லிங்கம், சூரியன், சந்தானகணபதி, பள்ளிகொண்ட பெருமாள், மகா கணபதி, சந்திரன்ஆகியோருக்கான சன்னதிகள் கோயிலை சுற்றி உள்ளன.

பெரிய பிரகாரம்:

இந்த கோயிலில் 3 பிரகாரங்கள் உள்ளன. கோயிலின் 3-வது பிரகாரம் 4,000 அடி நீளம்கொண்டது. இதன் அகலம் 17 அடி முதல் 21 வரை உள்ளது. உயரம் 30 அடி.தரையிலிருந்து 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பீடத்தில் இருக்கும் தூண்கள் ஒவ்வொன்றும் 12 அடி உயரம் கொண்டது.

இந்த தூண்கள் அக்கால கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் புகழ் பெற்று வருகிறது. உலகில் உள்ள எந்த கோயில்களிலும் இல்லாத நீண்ட பிரகாரம் இந்த கோவிலில் உள்ளது. உலகின் மிக நீண்ட பிரகாரம் கொண்ட கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

புண்ணிய தீர்த்தங்கள்: இந்த கோவிலின் உள்ளே 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. முதலில் கடலில் நீராடிவிட்டு இந்த தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

புண்ணிய தீர்த்தங்களின் பெயர்கள்:

காவாட்ச தீர்த்தம், காவய தீர்த்தம், நள தீர்த்தம், சங்குதீர்த்தம், சக்கர தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சிவ தீர்த்தம், மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சந்தியமிர்தா தீர்த்தம், சர்வதீர்த்தம்,கோடி தீர்த்தம்,சூரிய தீர்த்தம், சந்தர தீர்த்தம், ஆகியவை ஆகும்.

ராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்கும் சேது சமுத்திரத்தில் நீராடுவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சேதுவில் புனித நீராடி, ராமேஸ்வரம் கடலில் நீராடி ராமநாத ஸ்வாமியை தரிசித்தால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் குழந்தை பேறு உண்டாகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நிலவி வருகிறது.

மேலும் திருமணமாகாத பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

போக்குவரத்து வசதி :

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல தினமும் நேரடி ரெயில் வசதி உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும் நேரடி பஸ் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் விழாக்கள்
» ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் விழாக்கள்
»  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
»  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
» ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum