தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை

Go down

ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை Empty ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை

Post  meenu Fri Mar 08, 2013 1:04 pm

ராமேஸ்வரம்: மகா சிவராத்திரி விழா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று காலை 9 மணியளவில் பஞ்சமூர்த்திகளுடன் அம்பாள் தங்கக் கேடயத்தில் வீதியுலாவும், இரவு சுவாமி அம்பாள் எழுந்தருளலும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3ம் நாளான இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்படுகிறது. 3 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்.

அதிகாலை 5 மணிக்கு தங்கச் சப்பரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வீதியுலா நடக்கிறது. பின்னர் சுவாமி சன்னதியில் கால பூஜைகள் நடந்து பூத வாகனத்தில் சுவாமி, கிளி வாகனத்தில் அம்பாள் கெந்தமான பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று 6 மணிக்கு சுவாமிகள் புறப்பாடாகி வீதியுலா வந்து இரவு 9 மணியளவில் கோயிலை வந்தடைகின்றனர்.

இதையொட்டி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை சாத்தப்படுகிறது. இரவு 9 மணிக்குப் பின் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு அர்த்தஜாம, பள்ளியறை பூஜைகள் நடைபெறும். இரவு 9 மணிக்குப் பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நடை சாத்தப்படுவதையொட்டி 22 தீர்த்தங்களிலும் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ராமேஸ்வரம் கோயிலில் இன்று நடை அடைப்பு : தீர்த்தங்களில் நீராட தடை
» ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம்
»  பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
»  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்
»  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் பல வண்ண சித்திரங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum