தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'மோகனா'வாக மாறிய கவிதா நாயர்!

Go down

'மோகனா'வாக மாறிய கவிதா நாயர்! Empty 'மோகனா'வாக மாறிய கவிதா நாயர்!

Post  ishwarya Mon Mar 18, 2013 6:04 pm

ஏவிஎம் தயாரிப்பில், ஆர்.குமரன் இயக்கத்தில் 'முதல் இடம்' படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அறிமுகமான கவிதா நாயர் தனது பெயரை மோகனா என்று மாற்றி விட்டார். இந்த புதிய பெயருடன் ஒரு புதுப்படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார். 'பழசிராஜா' படத்தை இயக்கிய ஹரிஹரன் இயக்கும் புது மலையாளப் படத்தில் தான் மோகனா நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளப் பெண்ணான மோகனா ஏற்கனவே பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நரேன் மற்றும் இந்திரஜித் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். எம்.டி.வாசுதேவன் நாயர் இப்படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். இதுவரை குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் வலம் வந்த மோகனா, இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இது பற்றி மோகனா கூறுகையில், "எம்.டி.வாசுதேவன் நாயர் கதை, வசனத்தில், 'பழசிராஜா' இயக்குநர் ஹரிஹரன் சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்யமாக கருதுகிறேன். குழந்தை நட்சத்திரமாக வலம்வந்த மலையாள பட உலகிலும் கதாநாயகியாக அறிமுகமாகப் போகிறேன் என்பதில் பெரும் மகிச்சியடைகிறேன். கதாநாயகர்களான நரேன் மற்றும் இந்திரஜித்துடன் இணைந்து கதாநாயகியாக நடிப்பதிலும் சந்தோஷமாக இருக்கிறது." என்றார். என்ன கலர் பூசினாலும் மல்லிகை ரோஜாவாக முடியுமா...? புரிஞ்சா சரி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum