இலங்கை டெஸ்ட்: வங்கதேசம் ரன் குவிப்பு
Page 1 of 1
இலங்கை டெஸ்ட்: வங்கதேசம் ரன் குவிப்பு
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 638 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹீம் இரட்டை சதமடித்தார். இதன் மூலம் இரட்டை சதமடித்த முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர் விளையாடிய வங்கதேச அணி 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 4-ம் நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்த அணியின் ரஹீம் 152 ரன்களுடனும், அஷ்ரபுல் 189 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
இரட்டை சதமடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரபுல் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நஸீர் ஹுசைன் களமிறங்கினார். இவருடன் ஜோடி சேர்ந்தார் ரஹீம். இருவரும் இணைந்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹீம், 320 பந்துகளில் இரட்டை சதமடித்தார். 1 சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்களை எடுத்தார். இரட்டை சதமடித்தவுடன், அடுத்த பந்தில் ரஹீம் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சிறப்பாகவும், சிறிது அதிரடியாகவும் விளையாடிய ஹுசைன் 147 பந்தில் சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய ஹுசைன் மேற்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க அந்த அணி 196 ஓவர்களில் 638 ரன்களை குவித்தது.
68 ரன்கள் முன்னிலை: இதனால் வங்கதேச அணி, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 68 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தில்ஷான் 63 ரன்களுடனும், சங்ககாரா 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக, 3 ரன்கள் எடுத்த கருணரத்னா ஆட்டமிழந்தார்.
டிராவுக்கே வாய்ப்பு: 4-ம்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கைவசம் இன்னும் 9 விக்கெட்டுகள் உள்ளது. மேலும் ஒரே ஒருநாள் மட்டுமே உள்ளதால் இந்த ஆட்டம் டிராவாகவே முடிய அதிக வாய்ப்புள்ளது.
போட்டித் துளிகள்:
* இந்த போட்டியில் வங்கதேச அணி 638 ரன்கள் குவித்ததே, அந்த அணியின் ஓர் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அந்த அணி 556 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது.
* இலங்கைக்கு எதிராக அந்நாட்டில் விளையாடும் போட்டியில், ஓர் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் குவித்த 3-வது அணி என்ற பெருமையை வங்கதேசம் பெற்றது. இதற்கு முன், இந்தியாவும், பாகிஸ்தானும் அந்த அணிக்கு எதிராக 600 ரன்களுக்கு மேல் குவித்திருந்தன.
* இந்தப் போட்டியில் 10 ரன்களில் இரட்டைச் சதத்தை தவறவிட்டார் அஷ்ரபுல். இதனால், முதல் இரட்டை சதமடித்த வங்கதேச வீரர் என்ற பெருமையையும் அவர் நழுவ விட்டார். எனினும், அக்குறையை முஷ்பிகுர் ரஹீம் போக்கினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாகிஸ்தான் தேர்தல் பாதுகாப்புக்கு 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
» தென்னாபிரிக்காவில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றது இலங்கை
» இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் முன்பு போலீஸ் குவிப்பு
» 150 வது டெஸ்ட்டில் ஜேக் கேலிஸ் அதிரடி: 159 ஓட்டங்கள் குவிப்பு
» வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு… பெரும் பதட்டம்!
» தென்னாபிரிக்காவில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றது இலங்கை
» இன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்- பள்ளிகள் முன்பு போலீஸ் குவிப்பு
» 150 வது டெஸ்ட்டில் ஜேக் கேலிஸ் அதிரடி: 159 ஓட்டங்கள் குவிப்பு
» வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு… பெரும் பதட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum