5வது முறையாக உலக சாம்பியன் ஆனார் ஆனந்த்
Page 1 of 1
5வது முறையாக உலக சாம்பியன் ஆனார் ஆனந்த்
மாஸ்கோ : இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்தார். விஸ்வநாதன் ஆனந்த் (42) , போரிஸ் ஜெல்பாண்ட் (43, இஸ்ரேல்) இடையேயான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. முதலில் இருவரும் 12 சுற்றுகள் கொண்ட லீக் ஆட்டங்களில் மோதினர். இந்த ஆட்டங்களின் முடிவில், இரு வீரர்களும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகித்ததால், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க 4 போட்டிகள் கொண்ட ‘டை பிரேக்கர்’ விரைவு சுற்று நடத்தப்பட்டது.
மாஸ்கோவில் நேற்று நடந்த டை பிரேக்கர் சுற்றில், முதல் போட்டி டிரா ஆனதால் இருவருக்கும் தலா அரை புள்ளி கிடைத்தது. இரண்டாவது போட்டியில் அபாரமாக விளையாடி வென்ற ஆனந்த் 1.5 புள்ளியுடன் முன்னிலை பெற்றார். மூன்றாவது போட்டி டிரா ஆனதால், ஆனந்த் 2,1 என்ற புள்ளிக் கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்ததுடன், விரைவு சுற்றின் கடைசி ஆட்டத்தை டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற சாதகமான நிலை ஏற்பட்டது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த கடைசி ஆட்டத்தில் ஆனந்த் டிரா செய்து ஒட்டு மொத்தமாக 8.5,7.5 என்ற புள்ளிக் கணக்கில் ஜெல்பாண்டை வீழ்த்தி 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். ஆனந்துக்கு ரூ.8.6 கோடி ரொக்கப் பரிசும், ஜெல்பாண்டுக்கு ரூ.6.4 கோடியும் கிடைத்தது.
ஏற்கனவே 2000, 2007, 2008 மற்றும் 2010ல் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள ஆனந்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன. சதுரங்க சக்கரவர்த்தி ஆனந்த், 1991,92ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், 2007ல் பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கலக்கல் ஆட்டம் போட்ட சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம்! (படங்கள்
» நட்சத்திர கிரிக்கெட்: 2வது முறையாக சென்னை சாம்பியன்!!
» கேரம்: இலங்கையின் நிஷாந்த ஃபெர்ணாண்டோ உலக சாம்பியன்
» அமெரிக்க ஓபன் டென்னிஸ்:ஆண்டி மர்ரே சாம்பியன்
» இறகுப் பந்தாட்டம்: யுகாண்டா ஓபனில் இலங்கையின் டினுகா சாம்பியன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum