தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலக்கல் ஆட்டம் போட்ட சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம்! (படங்கள்

Go down

கலக்கல் ஆட்டம் போட்ட சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம்! (படங்கள் Empty கலக்கல் ஆட்டம் போட்ட சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம்! (படங்கள்

Post  meenu Mon Mar 18, 2013 1:10 pm



36

ரியோ நகரில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த கார்னிவல் எனப்படும் வசந்தோற்சவ விழா வெகு பிரபலமானது. இந்த விழாவின்போது பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா நடனத்தை ஆடியபடி அழகிகள் ஊர்வலம் போவார்கள். விழாவின் இறுதியில் சிறந்த முறையில் நடனம் ஆடியவர்களுக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

இதை தட்டிச் செல்ல அங்கு கடும் போட்டியே நடக்கும். பல்வேறு சம்பா பள்ளிகள் சார்பிலும் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டும் சிறந்த முறையில் சம்பா நடனப் போட்டி நடைபெற்றது. இறுதியில், விலா இசபெல் சம்பா பள்ளிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.

கார்னிவலின்போது நடைபெறும் சம்பா நடனங்களைப் பார்க்க 40 நடுவர்கள் கொண்ட குழு அமர்ந்திருந்தது. இவர்கள் ஒவ்வொரு நடனத்தையும் பார்த்து ஓட்டுப் போட்டு வெற்றியாளரைத் தேர்வு செய்தனர்.

இந்த ஆண்டுக்கான பட்டத்தை வென்ற விலா இசபெல் சம்பா பள்ளி கடந்த 65 ஆண்டு கால கார்னிவல் வரலாற்றில் 3வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

விலா இசபெல் பள்ளிக்குக் கடும் போட்டியாக பெஜா புளோர் என்ற சம்பா பள்ளி விளங்கியது. இப்பள்ளிக்கு 299.4 புள்ளிகள் கிடைத்தன. ஆனால் விலா பள்ளிக்கு 299.7 புள்ளிகள் கிடைத்தால் அது வெற்றி பெற்று விட்டது.

வெறும் டான்ஸ் மட்டும் இங்கு தகுதியாக பார்க்கப்படுவதில்லை. மாறாக, இசை, கிரியேட்டிவிட்டி, கலைநயம் உள்ளிட்டவற்றையு் நடுவர்கள் பார்த்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு விழாவின்போது மொத்தம் 3800 சம்பா டான்ஸர்கள் கலந்து கொண்டனர். மேலும் 7 பிரமாண்ட அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன. 72,000 பேர் அமர்ந்து பார்வையிடக் கூடிய சம்பாடிரோமில் இந்த கண்கவர் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சம்பா விழாவைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து 9 லட்சம் பேர் ரியோவுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து நாட்கள் இந்த விழா நடந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum