தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை அணி படுதோல்வி! தொடரை வென்றது அவுஸ்திரேலியா!

Go down

இலங்கை அணி படுதோல்வி! தொடரை வென்றது அவுஸ்திரேலியா! Empty இலங்கை அணி படுதோல்வி! தொடரை வென்றது அவுஸ்திரேலியா!

Post  meenu Sun Mar 17, 2013 1:00 pm

1994689894sri

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ரெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி சற்று முன்னர் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 156 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழக்க, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை மாத்திரம் இழந்தது. எனினும் உபாதைக்கு உள்ளான இலங்கை அணி வீரர்கள் மூவர் துடுப்பெடுத்தாட களம்வரவில்லை என்பதால் அவர்களும் ஆட்டமிழந்தவர்களாக கருதப்பட்டனர்.

குமார சங்கக்கார 27 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, காயம் காரணமாக வெளியேறினார். அவரால் மீண்டும் துடுப்பெடுத்தாட வரமுடியவில்லை.

அத்துடன் சானக வெலகெதர மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகியோர் துடுப்பெடுத்தாட ஆடுகளத்திற்கே நுழையவில்லை. இவர்கள் இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.

போட்டியின் நாயகனாக மிச்செல் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட ரெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் அவுஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum