தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தென்னாபிரிக்காவை வென்றது இலங்கை: திலகரட்ன தில்ஷான் 87 ஓட்டங்கள்

Go down

தென்னாபிரிக்காவை வென்றது இலங்கை: திலகரட்ன தில்ஷான் 87 ஓட்டங்கள் Empty தென்னாபிரிக்காவை வென்றது இலங்கை: திலகரட்ன தில்ஷான் 87 ஓட்டங்கள்

Post  meenu Mon Mar 18, 2013 12:38 pm



தென்னாபிரிக்காவுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவின் கிம்பர்ளி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் வெற்றி இலங்கை அடைந்தது.
இலங்கை அணித்தலைவர் திலகரட்ன தில்ஷான் 87பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பௌண்டரிகள் உட்பட 87 ஓட்டங்களைப் பெற்றார். தினேஸ் சந்திமால் 81 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

திசேர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றார். இவற்றில் 5 சிக்ஸர்கள் 3 பௌண்டரிகளும் அடங்கும். ஏஞ்சலோ மத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல்21 ஓட்டங்களைப் பெற்றார்.

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் சோட்சோப் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக திசேர பெரேரா தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இலங்கை அணி வெற்றி பெறுவது இதுவே முதல் தடவையாகும். தென்னாபிரிக்க அணி தற்போது 3-1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

5 ஆவது போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை ஜொஹான்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum