தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.சி.சி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா, இலங்கை!

Go down

ஐ.சி.சி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா, இலங்கை! Empty ஐ.சி.சி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா, இலங்கை!

Post  meenu Sun Mar 17, 2013 12:45 pm


20


ICCசர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய அணி 119 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதே புள்ளியில் இங்கிலாந்து அணி இருந்தாலும் தசமபுள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது. அவுஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து– நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

இந்த தொடரில் இங்கிலாந்து 3 ஆட்டத்திலும் வெற்றி கண்டால் அந்த அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்கும்.

மேற்கிந்திய தீவுகள்– அவுஸ்திரேலியா இடையிலான ஒரு டி20 போட்டி முடிவில் வெளியிடப்பட்ட அணிகள் தரவரிசையில் இலங்கை அணி (131 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி 124 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்திய அணி 119 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

டி20 போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் முதலிடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 5 இடங்கள் முன்னேறி இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனவுடன் இணைந்து 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 2வது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் வீராட் கோஹ்லி 2 இடங்கள் பின்தங்கி 8வது இடம் வகிக்கிறார். மற்ற இந்திய வீரர்கள் சுரேஷ்ரெய்னா 9வது இடத்திலும், யுவராஜ்சிங் 14வது இடத்திலும், கவுதம் கம்பீர் 17வது இடத்திலும் இருக்கின்றனர்.

பந்து வீச்சு தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்களில் அஸ்வின் 17வது இடம் பிடித்துள்ளார்.

சகலதுறை வீரர்களின் வரிசையில் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் 2வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் யுவராஜ்சிங் 3வது இடத்தில் உள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum