குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீதான ஹெரோயின் குற்றச்சாட்டு உறுதி!
Page 1 of 1

Vijendar_Singhஹெராயின் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனுப்சிங் கஹ்லோனை, தானும், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் பல முறை சந்தித்துள்ளதாக போலீசாரிடம் ராம்சிங் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன் குத்துச்சண்டை வீரர் ராம்சிங்கை, போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையின் பேரில், கடந்த 3ம் தேதி, 550 கிராம் ஹெராயின் வைத்திருந்த, கனடா வாழ் இந்தியர் அனுப்சிங், குல்விந்தர்சிங் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்படி, பஞ்சாப்பின் மொகாலி மாவட்டத்தின் ஜிரக்புரில் உள்ள அனுப்சிங் வீட்டில் இருந்து 26 கி.கி., ஹெராயின் (போதைப்பொருள்) பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 130 கோடி. இவர்களிடம் விசாரித்ததில் விஜேந்தர்சிங், ராம்சிங் ஆகியோரது பெயரை குறிப்பிட்டனர். தவிர, விஜேந்தர் சிங்கிற்கு போதை மருந்து கொடுத்ததாகவும், அவர் தங்களது வாடிக்கையாளர் என்றும் தெரிவித்தனர். இந்த புகாரை விஜேந்தர்சிங் மறுத்தார். தனக்கு தொடர்பில்லை என கூறினார்.
இந்நிலையில் ராம்சிங்கிடம் போலீசார் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அப்போது, தானும், விஜேந்தர் சிங்கும் கடந்த டிசம்பர் மாதம் முதல் அனுப் சிங்கை பல முறை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் , கடந்த டிசம்பர் மாதம் முதல் 4 அல்லது 5 முறை சந்தித்துள்ளோம். அனுப் சிங்கிடமிருந்து தானும், விஜேந்தர்சிங்கும் போதைப்பொருள் வாங்கியுள்ளோம். போதைப்பொருளை நாங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்த மாட்டோம் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லூதியானா டி.ஐ.ஜி., பாருக்கி கூறுகையில், கடந்த காலங்களில் பல விளையாட்டு வீரர்கள், போதைப்பொருள் வழக்குகளில் சிக்கியுள்ளனர். இந்த முறையும் சில விளையாட்டு வீரர்கள் சிக்கியுள்ளனர். அனுப்சிங் கூட ஷாட்புட் வீரர் என கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ராணுவ அதிகாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி
» விஜேந்தர் சிங் 12 முறை ஹெராயின் பயன்படுத்தினார்: பஞ்சாப் போலீசார் தகவல்
» இலங்கை தமிழர் பிரச்சினையில் குற்றச்சாட்டு

» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum