இலங்கை தமிழர் பிரச்சினையில் குற்றச்சாட்டு
Page 1 of 1

சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் தங்கள் கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது தடவையாக வெளிநடப்பு செய்தனர்.
இலங்கை தமிழர் பிரச்சினை
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் இந்திராகாந்தி, இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று குற்றம்சாட்டினார்.அவரது குற்றச்சாட்டுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர் இந்திராகாந்தி தொடர்ந்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருக்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, அ.தி.மு.க. உறுப்பினர் பட்ஜெட் தொடர்பாக பேசாமல் வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்கள்.
மன்னிக்கவே முடியாது
அ.தி.மு.க. உறுப்பினர் இந்திராகாந்தி தொடர்ந்து பேசவே தி.மு.க. கொறடா ஆர்.சக்கரபாணி எழுந்து இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேச தொடங்கினார். ஆனால், சபாநாயகர் ப.தனபால் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை. அப்போது அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:–இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. அந்த துரோகத்தை எத்தனை ஜென்பம் எடுத்தாலும் மன்னிக்க முடியாது. இலங்கையில் இறுதிகட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் இங்கு ஆட்சியில் இருந்தது தி.மு.க.தான். அதேபோல், மத்திய அரசிலும் இருந்தும் துணைபோனீர்கள். எனவே, தி.மு.க.வை மன்னிக்கவே முடியாது.இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
தி.மு.க. வெளிநடப்பு
அவரது குற்றச்சாட்டுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபடியே சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.ஏற்கனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை ஓராண்டுக்கு நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இலங்கை தமிழர் பிரச்சினைக்காக 2–வது தடவையாக வெளிநடப்பு செய்தார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கை தமிழர் பிரச்சினையில் குற்றச்சாட்டு
» இலங்கை விவகாரம் : 'இந்திய ஜனாதிபதியின் உரை தமிழர் உணர்வை பிரதிபலிக்கவில்லை'
» தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» ஹெலிகாப்டர் ஊழல் பிரச்சினையில் கருணை காட்ட மாட்டோம் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum